திரைப்படத்திற்காக ஸ்கிரிப்ட் தயார் பண்ணும் ஸ்ருதிஹாசன் | அஜித் 62 அறிவிப்பு எப்போது? - வெளியான தகவல் | விடுதலை படத்தில் 11 இடங்களில் ‛மியூட்' | சமந்தாவை கவர்ந்த அல்லு அர்ஜுனின் மகள் ஆரா | 'கைதி' வரவேற்பு : ஹிந்தி ரீமேக்கான 'போலா'வுக்குக் கிடைக்குமா? | ஹிந்தியில் இருந்து தமிழுக்கு வந்த 'பிசாசினி' | மகேஷ் பாபு நடிக்கும் படம் : டைட்டிலுக்கு முன்பே ரிலீஸ் தேதி அறிவிப்பு | 2 நாயகிகள் அறிமுகமாகும் அங்காரகன் | 31ம் தேதி தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படம் | 8 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய திரையில் ஷெரின் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் ராமராஜன். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெள்ளி விழா படங்களாக அமைந்தன. பின்னர் அரசியல் என தனது பயணம் மாறியதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சமீபத்தில் கொரோனாவால் பாதித்த நடிகர் ராமராஜன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டதாக தகவல் பரவியது.
இதுகுறித்து ராமராஜன் கூறியுள்ளதாவது: கொரோனாவில் இருந்து இப்போது தான் மீண்டுள்ளேன். நான் நடிகனான போதே எம்மதமும் சம்மதம் என்றாகி விட்டேன். மூன்று மதமும் என் மதமே. கோவிலுக்கும் போவேன், தர்காவுக்கும் போவேன். அரசியலிலும் வந்த பின், ஒரு மதத்தில் மட்டும் நான் எப்படி இருக்க முடியும். எல்லாருமே எனக்கு வேண்டும். சாதியும், மதமும் நான் பார்ப்பதில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.