Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

அன்றே சூசகமாக சொன்ன ஷில்பா ஷெட்டியின் கணவர்

22 ஜூலை, 2021 - 19:33 IST
எழுத்தின் அளவு:
Raj-kundras-previous-statement

ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னிகளில் ஒருவராக வளைய வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு ஆடியவர். ஒருகட்டத்தில் பாலிவுட்டின் புதிய வரவுகளால் மவுசு குறைய தொடங்கவே, 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு வியான் என்கிற ஒரு மகனும் இருக்கிறான்.

இந்தநிலையில் தற்போது சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் ராஜ் குந்த்ரா. போலீஸ் விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமலேயே தான் இந்த வேலைகளை ராஜ் குந்த்ரா செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஷில்பாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு செய்தி பலமாக அடிபட்டது.. அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவுடன் இருக்க பிடிக்காமல் அவரது கம்பெனி அலுவலகத்திலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவே அப்போது, ஒரு விளக்கம் அளித்தார்.

“நான் ஷில்பாவுடன் அதிக நேரம் செலவிடுவது இல்லை என அவரது தோழிகளிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஷில்பா. அதுதான் இப்படி அப்படி என திரிந்து, நாங்கள் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகும் அளவுக்கு வந்துவிட்டது. உண்மையில் ஒரு டீல் விஷயமாக தினசரி 20 மணி நேரம் ஆபிஸில் இருக்கிறேன்.. வீட்டில் இருக்கும் அந்த நான்கு மணி நேரமும் கூட வீட்டில் தலைகாட்டுவதற்கும் குளித்து உடைமாற்றிவிட்டு வருவதற்குமே சரியாக போய்விடுகிறது. உண்மை காரணம் இதுதான்” என கூறியிருந்தார் ராஜ்குந்த்ரா. ஒருவேளை அவர் குறிப்பிட்ட அந்த இருபது மணி நேர ஆபீஸ் ஒர்க் இதுவாகத்தான் இருந்திருக்குமோ என்னவோ ?

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி பெண்களை விபசாரத்தில் தள்ளிய தயாரிப்பாளர் கைதுசினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி ... வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் ; உயர்நீதிமன்றத்தில் கங்கனா கோரிக்கை வழக்கை தள்ளுபடி செய்யுங்கள் ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
26 ஜூலை, 2021 - 04:41 Report Abuse
meenakshisundaram குளிச்சு உடை மாற்ற ஆபீஸ் இல் வசதி இல்லியோ ?
Rate this:
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் எங்கே அந்த செல் தட்டி குடும்பம்
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
25 ஜூலை, 2021 - 13:01Report Abuse
கௌடில்யன்தொழில் அதிபரை கல்யாணம் பண்ணறதுக்கு முன்னாடி எந்த தொழிலுக்கு அதிபர்னு ஆராயனும் .....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in