Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமாவுக்கு வந்த சோதனை : திருத்தப்பட்ட வரைவு மசோதா என்ன சொல்கிறது?

02 ஜூலை, 2021 - 12:28 IST
எழுத்தின் அளவு:
What-changes-in-Censor-system,-what-is-problem-to-cinema?

திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்தை எதிர்த்து, அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என, நடிகர் கமல், டுவிட்டர் பக்கத்தில் எழுதினார். கூடவே, கண், வாய், காதுகளை அடைத்துக் கொண்டு இருக்கும், மூன்று குரங்கு சின்னங்களாக, ஒருபோதும் சினிமா, மீடியா மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால், அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும் என்றும், குறிப்பிட்டு இருந்தார்.

கமல் மட்டுமல்ல, பல இந்திய சினிமாக்காரர்களும், தங்கள் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். திருத்தப்பட்ட வரைவு ஒளிப்பதிவு சட்டத்தில், அப்படி என்ன இருக்கிறது?

நெறிப்படுத்தும் சட்டம்
இந்தச் சட்டம் தான், இந்தியாவில் திரைத் துறையை நெறிப்படுத்தும் சட்டமாக இருந்து வருகிறது. இதில், நான்கு திருத்தங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்தங்களுக்கு அடிப்படை, சினிமா துறையில் நடைபெறும் பல்வேறு விதமான திருட்டுகளை கட்டுப்படுத்துவது தான் என்று தெரிவிக்கிறது இந்த மசோதா.

தற்போது திரைப்படங்கள், யு, யு/ஏ மற்றும் ஏ என்று பகுக்கப்படுகின்றன. இதில், யு திரைபடங்களை அனைவரும் பார்க்கலாம். யு/ஏ சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை, 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், பெற்றோரது வழிகாட்டுதலோடு பார்க்கலாம். ஏ திரைப்படங்கள் முற்றிலும் பெரியவர்களுக்கானது.
இதில், யு/ஏ சான்றிதழை, வயது வாரியாக பகுப்பதற்கான வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, யு/ஏ 7+, யு/ஏ 13+ மற்றும் யு/ஏ 16+ என்று பிரிக்கப்பட்டுள்ளன. தற்போது, ஓ.டி.டி., தளங்களில் திரைப்படங்களும், வெப் சீரிஸ்களும் அதிகமான பின், இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதை கருத்தில் கொண்டே, யு/ஏ சான்றிதழ் மேலும் பகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திருத்தம், நேரடியாக சினிமா திருட்டு சம்பந்தப்பட்டது. இதற்காக, 6ஏஏ என்ற தனிப்பிரிவு இணைக்கப்பட உள்ளது.

5 சதவீதம் அபராதம்
அதன்படி, எந்த வகையிலும், எந்த இடத்தில் இருந்தும், படத்தின் இயக்குனரது எழுத்துபூர்வமான அனுமதியின்றி, படத்தின் ஒரு சில பகுதிகளோ, முழு படமோ, ஒலி - ஒளிப்பதிவு செய்யப்படக் கூடாது. அப்படி செய்யப்பட்டால், மூன்று மாதம் முதல், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை உண்டு. மேலும் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல், மொத்த தயாரிப்பு செலவில் 5 சதவீதம் வரை அபராதம் உண்டு.

மூன்றாவது திருத்தம், தணிக்கை சான்றிதழின் காலம் தொடர்பானது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ், 10 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். அதை காலம் முழுதும் செல்லுபடியாகும் சான்றிதழாக வழங்குவதற்கான திருத்தம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

முக்கியமான நான்காவது திருத்தம் தான், சினிமாக்காரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. தற்போது ஒரு திரைப்படத்துக்கு, தணிக்கை குழு சான்றளித்து, திரையரங்குகளுக்கு வந்த பின், அதை மத்திய அரசு திருத்த முடியாது.
புதிய அறிமுகம்
அதற்கான அதிகாரம், மத்திய அரசுக்கு இல்லை என்று, ஏற்கனவே கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்து, அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஒரு புதிய திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும் விதமாகவோ, பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் விதமாகவோ, அண்டை நாடுகளுடன் உள்ள நட்புறவை பாதிக்கும் விதமாக. பொது அமைதி, கண்ணியம், அறநெறியை குலைக்கும் விதமாகவோ; நீதிமன்றத்தின் மாண்பை அவமதிக்கும் விதமாகவோ உள்ளடக்கம் இருப்பதாக புகார் வருமானால், திரையரங்கத்தில் ரிலீஸாகி இருந்தாலும், அந்த சினிமாவை மறுமுறை ஆய்வு செய்யும்படி, தணிக்கை குழு தலைவருக்கு, மத்திய அரசு அறிவுறுத்தலாம்.

இந்த திருத்தத்தின் படி, மத்திய அரசு, சூப்பர் சென்சாராக மாற முயற்சி செய்கிறது என்ற, விமர்சனம் எழுந்துள்ளது. இந்த திருத்தங்கள் தொடர்பான தங்கள் கருத்துகளை, பொது மக்கள் இன்று வரை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தெரிவிக்கலாம்.

- நமது நிருபர் -


Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா 3 வது அலை அச்சம் : குழந்தைகளுக்காக தனி வார்டு அமைக்கும் ஹூமா குரேஷிகொரோனா 3 வது அலை அச்சம் : ... குரல்வளையை நெறிப்பதற்காக சட்டம் அல்ல: சூர்யா குரல்வளையை நெறிப்பதற்காக சட்டம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

Shankar G - kuwait,குவைத்
03 ஜூலை, 2021 - 09:11 Report Abuse
Shankar G சினிமா ஒளிஞ்சால் நாட்டுக்கு விடுவு
Rate this:
nizamudin - trichy,இந்தியா
03 ஜூலை, 2021 - 10:28Report Abuse
nizamudinசினிமா இல்லையேல் சாராயம் போதைக்கு அடிமை அதிகமாகிவிடும்...
Rate this:
03 ஜூலை, 2021 - 04:11 Report Abuse
Raghasrin சில கிறுக்கன்களால் சினிமா பாதிக்கபடுகிறது. நாட்டின் இறையாண்மை பாதுகாக்க சட்டதிருத்தங்கள் அவசியம்
Rate this:
Manian - Chennai,ஈரான்
03 ஜூலை, 2021 - 02:33 Report Abuse
Manian ஏற்கனவே சட்டத்தை மதிக்காத, மதிக்காதவர்களை தண்டிக்க வழி இல்லை. எனவே இந்த சட்டத்தை மதிக்காதவர்களே இதை எதிர்க்கிறா்கள் அவிழ்த்து ஓடி திரிந்தநாயை கட்டிப் போடுவது தேவைதான், இல்லையேல் வெறியில் அடுத்தவர்களை கடித்து குதறும். உறிமை என்றால் அதை மதிக்கும் அறிவும் வேண்டும்.
Rate this:
02 ஜூலை, 2021 - 16:07 Report Abuse
Thangarajan Kanagaraman இது மக்களுக்கான நல்ல திருத்தங்கள்உள்ள சட்டம் இது தீவிரவாதிகளுக்கும் திருடர்களுக்கு துணை போகிறவர்களுக்கும் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
Rate this:
navasathishkumar - MADURAI,இந்தியா
02 ஜூலை, 2021 - 14:01 Report Abuse
navasathishkumar கண்டிப்பாக தேவை தான் ...கமல் மாதிரி இப்ப பலர் லிப் லாக் காட்சிகளை செய்ய முடியாது ...படம் வருவதற்கு முன்பே சென்சார் பார்க்காத மாதிரி இங்கேய உள்ள பல கட்சிகல் ...படத்தை தடை செய் என்றுசொல்வதும் தவிர்க்கப்படும் ..அடுத்த ரிக்வஸ்ட் தமிழ் புரியாமல் பாட்டு வந்தால் அதற்கு கீழ் அர்த்தம் வேண்டும் ..குறிப்பாய் சென்னை பாஷை என்று வலி மங்கா வலி .. என்று கரகரத்த குரலில் படுகிறார்கள் எந்த சிச்சுவேசன் ஏன் பாடுகிறான் நாயகன் ..அர்த்தம் என்ன புரியாமல் படம் மட்டுமல்ல ரேடியோ வில் கேட்க்கும் போதும் நமக்கு தலை வலிக்கிறது ஆகவே கண்டிப்பாக சென்சாரில் இதற்கான அர்த்தம் போட்டால் தான் பாட்டை வெளியிட வேண்டும் ..போற போற போக்கில் நாளைக்கு அது அசிங்க மான வார்த்தையாக இருக்கலாம் ..
Rate this:
Raja - Coimbatore,இந்தியா
04 ஜூலை, 2021 - 10:53Report Abuse
Rajaநினைப்பு தான் பொழப்ப கெடுக்கும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி இருக்கு உங்க பதிவு. இதில் எதுவும் நடைபெறாது. அரசை விமர்சித்து அல்லது அவர்களது கருத்துக்கு ஒவ்வாத படங்களை மட்டுமே இதில் வரையறை செய்வார்கள்....
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in