Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இருப்பதே இழுத்துக் கிடக்க, புதிதாக இன்னொன்றா?

30 ஜூன், 2021 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Is-kamal-going-to-do-one-more-film?

தமிழ்த் திரையுலகத்தில் 50 வருடங்களுக்கும் மேலாக அனுபவமுள்ளவர் கமல்ஹாசன். திறமையானவர், பல புதிய விஷயங்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், தற்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களே தடுமாறிக் கொண்டிருக்க புதிதாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' விவகாரம் நீதிமன்ற நிலுவையில் உள்ளது. 'சபாஷ் நாயுடு' படம் இனிமேலும் நகராது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் வேலைகள் எப்போதே ஆரம்பமாகியது, அதன்பின் என்ன ஆனதென்றே தெரியவில்லை. அவற்றோடு 'விக்ரம்' படத்திற்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.

அத்தனை படங்களும், எப்போது முடிவுக்கு வரும் என இழுத்துக் கொண்டிருக்க, வெற்றிமாறன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கப் போகிறார் என்ற செய்தி பேச்சோடு போகுமா நடக்குமா என்பது சீக்கிரமே தெரிந்துவிடும்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'விக்ரம்' படத்தின் கதை, திரைக்கதையில் கமல்ஹாசன் தலையிட்டு சில பல மாற்றங்களை சொன்னதால் தான் அப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறது என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜிடம்  டைரக்ஷன் நுணுக்கங்கள் கற்ற அதிதி பாலன்பிரித்விராஜிடம் டைரக்ஷன் ... ஞானவேல்ராஜா மீதான அவதூறு வழக்கு ரத்து ஞானவேல்ராஜா மீதான அவதூறு வழக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Sharvintej - மதுரை ,இந்தியா
04 ஜூலை, 2021 - 13:25 Report Abuse
Sharvintej நல்லவேளை படத்தை பற்றி சொன்னீர்
Rate this:
gopal - chennai,இந்தியா
04 ஜூலை, 2021 - 12:28 Report Abuse
gopal கமல் இதோடு தனது அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையை நிறுத்திக்கொணடால் நாட்டுக்கு நல்லது .அவரது உளறல்கலு ம் செயல்களும் தா ங்கமுடியவில்லை
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
02 ஜூலை, 2021 - 12:23 Report Abuse
Sridhar மக்கள் நீதி மையம் என்று இன்னொரு படம் இருந்ததே, அதை மறந்துவிட்டீர்களா?
Rate this:
வால்டர் - Chennai,இந்தியா
02 ஜூலை, 2021 - 11:21 Report Abuse
வால்டர் விக்ரம் படம் ஆளவந்தான் படம் போல ஆகிவிடாமல் இருந்தால் சரி.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 ஜூலை, 2021 - 06:02 Report Abuse
J.V. Iyer வயதாகிவிட்டது. சரியாக யோசிக்க முடியவில்லை இவருக்கு. இவர் ஒரு மண்குதிரை ஆகிவிட்டார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in