Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சீரியஸ் டூ காமெடி மோகன்லால் ; ரூட்டை மாற்றிய பிரித்விராஜ்

24 ஜூன், 2021 - 19:32 IST
எழுத்தின் அளவு:
Prithviraj-change-the-way

மலையாளத்தில் கடந்த 2019ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் லூசிபர். மோகன்லால் நடித்த இந்தப்படத்தை இயக்கியதன் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார் பிரித்விராஜ், அரசியல்வாதி மற்றும் அண்டர்கிரவுண்ட் டான் என அந்தப்படத்தில் படம் முழுக்க சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன்லால். படமும் சீரியஸாகவே நகர்ந்தது.


இந்தநிலையில் தற்போது 'ப்ரோ டாடி' என்கிற தனது இரண்டாவது படத்தையும் மோகன்லாலை வைத்தே இயக்குகிறார் பிரித்விராஜ். ஆனால் லூசிபர் படத்திற்கு அப்படியே நேரெதிராக இந்தப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக இருக்கிறது..



இந்தப்படத்திற்கு கதை எழுதியுள்ள ஸ்ரீஜித் என்பவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த கதை பற்றி கூறும்போது, “பிரித்விராஜ் நடத்திவரும் தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கதையை படமாக்க வாய்ப்பு கிடைக்குமா என முயற்சித்தேன்.. இந்த கதையை கேட்க ஆரம்பித்த பிரித்விராஜ், கதையை சொல்லி முடிக்கும்வரை அடக்கமுடியாமல் அவ்வப்போது சிரிப்பை வெளிப்படுத்தினார். ஒருவாரம் கழித்து அவரே போன்செய்து இந்தப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார் என்றும் படத்தை தானே இயக்கப் போவதாகவும் கூறியது இரட்டிப்பு இன்ப அதிர்ச்சியாக இருந்தது” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மலையாள பாடலாசிரியர் பூவாசல் காதர் காலமானார்மலையாள பாடலாசிரியர் பூவாசல் காதர் ... ஹீரோவில் நிதி அகர்வால் ஹீரோவில் நிதி அகர்வால்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in