Advertisement

சிறப்புச்செய்திகள்

கமல் தாலி எடுத்து கொடுக்க... கன்னிகாவை மணந்தார் சினேகன் | பிரித்விராஜின் ‛குருதி' ஆக.,11ல் ஒடிடியில் ரிலீஸ் | பிரியதர்ஷன் இயக்கத்தில் குத்துச்சண்டை வீரராக மாறும் மோகன்லால் | அடுத்தமுறை ஆஜராகாவிட்டால் கைது ; கங்கனாவிடம் நீதிமன்றம் கடுமை | 'கேஜிஎப் 2 - வில்லன் சஞ்சய் தத் புதிய போஸ்டர் வெளியீடு | நண்பர்கள் இருவருக்கு படம் இயக்கும் வாய்ப்பு ; துல்கர் சல்மானின் பிறந்தநாள் பரிசு | தெலுங்கில் வெளியாகும் சூப்பர் டீலக்ஸ் | கோமா நிலையில் வேணு அரவிந்த் | காமெடியை விட குணசித்ர வேடங்களில் நடிக்க யோகி பாபு ஆர்வம் | ஓடிடி-க்குப் போட்டியாக டிவியில் நேரடி ரிலீஸ் : திகைப்பில் தியேட்டர்காரர்கள் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிரிப்புக்குப் பின்னால் ஆயிரம் உணர்வுகள் - லாஸ்லியா

19 ஜூன், 2021 - 11:36 IST
எழுத்தின் அளவு:
Thousand-feelings-behind-the-happiest-smile-says-Losliya

'பிக்பாஸ்' சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாகப் பேசப்பட்டவர்களில் லாஸ்லியாவும் ஒருவர். அந்நிகழ்ச்சியில் அவரும் மற்றொரு போட்டியாளரான டிவி நடிகர் கவினும் காதலிப்பதாக சர்ச்சை எழுந்தது. அதன்பின் வெளியில் வந்த பின் அந்த காதல் விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது.

இலங்கைத் தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா அங்கு தமிழ் டிவியில் செய்தி வாசிப்பாளராகப் பணிபுரிந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்திற்குப் பிறகு இங்கு தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடிக்கும் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார். அடுத்து கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கும் 'கூகுள் குட்டப்பன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிடும் சினிமா பிரபலங்களில் லாஸ்லியாவும் ஒருவர். நேற்று அவர் பதிவிட்ட புகைப்படங்களுடன், “எளிமையான பெண், இந்த மகிழ்ச்சியான சிரிப்பிற்குப் பின் ஆயிரம் உணர்வுகளை மறைத்து வைத்துள்ளவர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லாஸ்லியாவைத் தெரிந்த அளவிற்கு அவருடைய அப்பா மரியநேசனையும் ரசிகர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு தனது மகளையும், குடும்பத்தினரையும் சந்திப்பதற்காக கனடாவிலிருந்து பிக் பாஸ் வீட்டிற்கு வந்தவர் அவர். கடந்த வருடம் மாரடைப்பால் காலமாகிவிட்டார். லாஸ்லியாவின் பதிவில் அந்த ஆயிரம் உணர்வுகளில் அப்பாவை இழந்த உணர்வுதான் முதன்மையாக இருக்கும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
டிரஸ் பண்ணியாச்சி, எங்க போறது? - ஆண்ட்ரியா வருத்தம்டிரஸ் பண்ணியாச்சி, எங்க போறது? - ... 'ஜகமே தந்திரம்' விமர்சனங்களை 'ஸ்கிப்' செய்த தனுஷ் 'ஜகமே தந்திரம்' விமர்சனங்களை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in