Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பாபநாசம் 2 : கமல்ஹாசனைத் துரத்தும் அடுத்த இரண்டாம் பாகம்

08 ஜூன், 2021 - 16:54 IST
எழுத்தின் அளவு:
Fans-expecting-Papanasam-2-:-will-kamal-says-OK?

தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் இந்த அளவிற்கு சர்ச்சை ஏற்படுத்தியதே இல்லை என்று சொல்லுமளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திய படம் 'இந்தியன் 2'. இந்தியத் திரையுலகமே வியக்கும் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொல்லப்பட்ட ஷங்கர், உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன், தமிழ் சினிமாவில் 500 கோடி செலவில் படமெடுத்த ஒரே தயாரிப்பு நிறுவனம் எனப் பெயரெடுத்த லைக்கா ஆகியோர் இணைந்த 'இந்தியன் 2' முடியுமா, முடியாதா என்பதே தெரியாத நிலையில் கமல்ஹாசனை அடுத்தடுத்து சில இரண்டாம் பாகப் படங்களைப் பற்றிய செய்திகள் துரத்தி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு 'பஞ்சதந்திரம் 2' படம் பற்றி அதில் ஒரு கதாநாயகனாக நடித்த ஸ்ரீமன் ஒரு பதிவிட்டு பரபரப்பூட்டினார். அதோடு, கமல்ஹாசன் அவர் நடித்த சில முந்தைய படங்களின் இரண்டாம் பாகப் படங்களை உருவாக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பப்பட்டார்கள். அவற்றில் 'தேவர் மகன் 2, வேட்டையாடு விளையாடு 2,' என சில படங்களும் அடக்கம். அவையெல்லாம் நடக்குமா என்பதும் தெரியாது.

இப்போது கமல்ஹாசன் 'பாபநாசம் 2' படத்தை ஆரம்பிப்பாரா, மாட்டாரா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'த்ரிஷ்யம்' படம் தமிழில் ரீமேக்காகி 'பாபநாசம்' ஆக வெளிவந்தது. 'த்ரிஷ்யம் 2' கடந்த பிப்ரவரியில் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. அடுத்து அதை தெலுங்கிலும் ரீமேக் செய்து இயக்கி முடித்துவிட்டார் ஜீத்து ஜோசப்.

மலையாளம், தெலுங்கைப் போலவே தமிழிலும் 'பாபநாசம் 2' படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறாராம் ஜீத்து. ஆனால், முதல் பாகத்தில் ஜோடியாக நடித்த கௌதமிக்குப் பதிலாக இரண்டாம் பாகத்தில் மீனா அல்லது வேறொருவரை நடிக்க வைக்க வேண்டும் என்று கமல் விரும்புகிறாராம்.

தற்போது 'இந்தியன் 2, விக்ரம்' ஆகிய படங்கள் கைவசம் உள்ள நிலையில் 'பாபநாசம் 2' எப்படி டேக்-ஆப் ஆகும் என்பது கமல் கையில்தான் உள்ளது என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
ஜகமே தந்திரம் 2ம் பாகம்: தனுஷ் விருப்பம்ஜகமே தந்திரம் 2ம் பாகம்: தனுஷ் ... 'சுருளி' ஏன் 'ஜகமே தந்திரம்' ஆக மாறியது? 'சுருளி' ஏன் 'ஜகமே தந்திரம்' ஆக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Shekar - Mumbai,இந்தியா
09 ஜூன், 2021 - 10:21 Report Abuse
Shekar அப்படியே, உணர்ச்சிகள், அந்தரங்கம், பட்டாம்பூச்சி, போன்ற காவியங்களையும் பார்ட் டூ எடுக்கலாம்
Rate this:
ranjan - france,பிரான்ஸ்
09 ஜூன், 2021 - 09:32 Report Abuse
ranjan இங்குதான் தவறு நடக்கிறது .இப்படியான உயர் நடிகர்கள் சங்கர் போன்ற உயர் டிராக்டர்களால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த தயாரிப்பு நிறுவனம் அதல பாதாளம் நோக்கி செல்கிறது.நடிகர்களால் கஷ்ட நிலைக்கு வந்த தயாரிப்பாளர்கள் பலர்.ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பதை நிறுத்தி விட்ட்து.கமலகாசன் முதலில் இந்தியன் படம் நடித்து கொடுக்கவேண்டும் .அத்தன் மனிதாபிமானம் மனிதத்தன்மை.நன்றி
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
09 ஜூன், 2021 - 09:11 Report Abuse
R S BALA கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவை நடிக்க வைக்கலாம் ..
Rate this:
Ram - Thanjavur,இந்தியா
08 ஜூன், 2021 - 23:44 Report Abuse
Ram (பாப்பா)நாசம் - பல
Rate this:
சோணகிரி - குன்றியம்,இந்தியா
08 ஜூன், 2021 - 21:20 Report Abuse
சோணகிரி உலக்கை நாயகன் காமகாசனுக்கு வழக்கம் போல தன்னுடன் சேர்ந்து வாழ புதிதாக ஒரு 'தோழி'யை முதலில் ஏற்பாடு செய்துவிட்டு அதற்குப்பின் அந்தத்தோழியையே படத்தில் நடிக்கவைக்கும் ஐடியாவும் இருக்கலாம்...
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in