Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதியவர்களுக்கு ஆலோசனை சொன்ன அல்போன்ஸ் புத்திரன்

05 ஜூன், 2021 - 12:21 IST
எழுத்தின் அளவு:
Alphonse-puthren-gave-tips-to-new-comers

தமிழில் 'நேரம்', மலையாளத்தில் 'பிரேமம்' ஆகிய படங்களை இயக்கி பிரபலமானவர் மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். பேஸ்புக்கில் பரபரப்பாக செயல்படும் பிரபலங்களில் ஒருவர். அவருடைய பதிவுகளுக்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டால் சிலவற்றிற்கு பதில் சொல்வார். அப்படி ஒரு ரசிகர், “ஒரு படத்தை எப்படி உருவாக்க வேண்டும், என்னிடம் நல்ல கதை கைவசம் உள்ளது, புதியவர்களுக்கு ஒரு 'டிப்' சொல்லுங்களேன்,” எனக் கேட்டார்.

அதற்கு அல்போன்ஸ் புத்திரன், “ஒரு தயாரிப்பாளரைத் தேடுங்கள், அதை செயலாக்குங்கள். உங்களால் தயாரிப்பாளரைப் பிடிக்க முடியவில்லை என்றால், உங்கள் நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கேளுங்கள், பணத்தைப் பெற்று உருவாக்க முயற்சி செய்யுங்கள்.

மேலே செல்லும் போது யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள், காரணம் அது உங்களை கீழிறக்கியும் விடும். அவர்கள் உங்களுக்காகக் காத்திருப்பார்கள். அதனால், உங்களுக்கு யார் நல்லது செய்கிறார்களா அவர்களுடன் கனிவாக இருங்கள். இந்த செயலாக்கத்தில் உங்களை ஏமாற்றுபவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள். உங்கள் திட்டம் படம் தயாரிப்பாதாக மட்டும் இருக்க வேண்டும், உங்களை ஏமாற்றுபவர்களை தண்டிப்பதாக இருக்கக் கூடாது.

மேலிருந்தும், கீழிருந்தும், கிழக்கு, மேற்கிலிருந்தும் கவனச்சிதறல்கள் வரும். நம்பிக்கையுடன் உங்கள் மனதில் இருப்பதை உருவாக்குங்கள், உங்கள் நோக்கம் சரியானதாக இருந்தால் அந்த நோக்கமே உங்களைக் காப்பாற்றிவிடும்,” என பதிலளித்துள்ளார்.

அல்போன்ஸ் புத்திரனின் இந்த ஆலோசனைக்கு அவரது பாலோயர்கள் பலரும் லைக் கொடுத்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கதாநாயகியாக 30 ஆண்டுகள் : மீனா மகிழ்ச்சிகதாநாயகியாக 30 ஆண்டுகள் : மீனா ... அம்மாவை விட கூகுளுக்கு தெரியுமோ : வர்ஷா கிண்டல் அம்மாவை விட கூகுளுக்கு தெரியுமோ : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

05 ஜூன், 2021 - 12:44 Report Abuse
ilaiyaraja muthu நல்ல தமிழ் படமா (ஆட்டோகிராஃப்) பார்த்து அத கொஞ்சம் பட்டி, டங்கரிங் பண்ணி(பிரேமம்) தமிழ்நாட்டில் ரிலீஸ் பண்ணி காசு பார்த்த புத்திசாலி பேச்சு ......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in