Advertisement

சிறப்புச்செய்திகள்

நவரசாவுக்காக சித்தார்த்துடன் ஆன்லைன் ரிகல்சல்: பார்வதி தகவல் | அயன் வீடியோ சிறுவர்களுக்கு சூர்யா பாராட்டு | ஓடிடியையும் மிரட்டும் பைரசி : முன்பே வெளியானது மிமி | வென்று வா வீரர்களே: யுவனின் ஒலிம்பிக் பாடலை முதல்வர் வெளியிட்டார் | தணிக்கை செய்யப்பட்ட படத்தை எதிர்த்து யாரும் வழக்கு தொடர முடியாது : சர்கார் வழக்கில் முக்கிய தீர்ப்பு | ஆர்ஆர்ஆர் - 5 மொழிகளில் 5 பிரபலப் பாடகர்கள் பாடும் பாடல் | வலிமை டீசர் எப்போது? புது அப்டேட் | நடிகை ஷெர்லின் சோப்ராவுக்கு ஆபாச பட வழக்கில் தொடர்பு? | உயிர்த்தோழி பலியானது கூட தெரியாமல் சிகிச்சை பெறும் யாஷிகா | சர்ச்சையில் சிக்கிய சீரியல் புரோமோ : சுத்த பிற்போக்குத்தனம் என ரசிகர்கள் பாய்ச்சல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிசாசு படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதி

04 ஜூன், 2021 - 16:41 IST
எழுத்தின் அளவு:
Vijaysethupathi-guest-role-in-Pisasu-2

மிஷ்கின் இயக்கதில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா தான் நாயகி. நாயகன் என்று யாரும் இல்லை. பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.

ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம். இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். படம் பயமுறுத்தத்தான் செய்யும். அப்படியான கேட்டகிரியில் உருவாகும் படம்.

படத்தில் நாயகன் இல்லை. பூர்ணாவும், சந்தோஷ் பிரதாப்பும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் கேரக்டர் பற்றி விரிவாக சொல்ல இயலாது. வியக்கத்தக்க ஒரு கேரக்டர் என்று மட்டும் சொல்லாம். 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. என்றார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி விஞ்ஞான முறைப்படி பேய், பிசாசுகளிடம் பேசுகிறவர். பேயோட்டும் நவீன மந்திரவாதி என்ற கேரக்டரில் நடிப்பதாகவும், இதுபோன்ற கேரக்டர்கள் ஹாலிவுட் படங்களில் அதிகம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்யின் அடுத்த படம், திரையுலகில் சலசலப்பு...விஜய்யின் அடுத்த படம், திரையுலகில் ... அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை : நயன்தாரா பட நடிகை கண்ணீர் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in