Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

45 வருட இசைப் பயணத்தில் இளையராஜா

14 மே, 2021 - 12:29 IST
எழுத்தின் அளவு:
45-years-of-Ilayaraja

தமிழ்த் திரையுலகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் ஒரு சிலரே. அந்த விதத்தில் தமிழ் சினிமா இசையில் ஒரு அதிரடியான மாற்றத்தை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் இளையராஜா. 1976ம் ஆண்டு மே 14ம் தேதி வெளிவந்த 'அன்னக்கிளி' படத்தின் இசை, தமிழ் சினிமா ரசிகர்களை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்றது. அதற்கு முன்பு வரையிலும் அவர்கள் கேட்ட சினிமா இசைக்கும், 'அன்னக்கிளி' படத்தில் கேட்ட சினிமா இசைக்கும் அவ்வளவு மாற்றம் இருந்தது.

அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களில் இந்த மண்ணின் இசை ஒலித்தது. பாடல்களில் கிராமத்துத் தமிழ் விளையாடிது. ஒவ்வொரு ரசிகரையும் அந்தப் படத்தின் பாடல்கள் கட்டிப் போட்டது. எங்கோ ஒரு கிராமத்தில் திருவிழாவில் ஒலிக்கும் அந்தப் பாடல் காற்றில் வேறு ஒரு ஊருக்குத் தவழ்ந்து போனாலும் அங்குள்ளவர்களும் அப்பாடலைக் கேட்காமல் நகர்ந்ததில்லை.

இப்படி கடந்த 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் தனது தனித்துவமான இசையைப் பதிவு செய்து கோடானு கோடி இசை ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் இளையராஜா.

எத்தனை ஆயிரம் பாடல்கள், 1000க்கும் மேற்பட்ட படங்களுக்குப் பின்னணி இசை, பல பாடலாசிரியர்கள், விதவிதமான இனிமையான குரலை வெளிப்படுத்திய பாடகர்கள், பாடகிகள் என அவருடைய இந்த 45 வருடத் திரையுலகப் பயணம் சினிமா ரசிகர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டே போகலாம்.

தற்போதும் பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துக் கொண்டு தன்னுடைய இசைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கும் இளையராஜா இன்னும் பல்லாண்டுகள் அவரது பயணத்தைத் தொடர வாழ்த்துவோம்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் தாமதமாகும் ஓடிடி ரிலீஸ் படங்கள் : காரணம் என்ன ?தமிழில் தாமதமாகும் ஓடிடி ரிலீஸ் ... கணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதி வழங்கிய சவுந்தர்யா ரஜினி கணவர் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Ramachandran - Ranipet ,இந்தியா
21 மே, 2021 - 20:29 Report Abuse
Ramachandran இசைஞானியின் எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் கடைசி புள்ளி வரை தமிழ் படிப்போம் ஆகச் சிறந்தது மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு இன்று இறைவனுடன் பிரார்த்திக்கிறோம்
Rate this:
Ramachandran - Ranipet ,இந்தியா
21 மே, 2021 - 20:27 Report Abuse
Ramachandran மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அந்த பத்து படங்களின் பெயர்கள் தெரிந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும்
Rate this:
Nagaraj - Doha,கத்தார்
14 மே, 2021 - 14:39 Report Abuse
Nagaraj இசைஞானியின் இசை பயணம் மேலும் தொடரட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in