Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அண்ணாத்த முடிந்தது : ரஜினிகாந்த்தின் அடுத்த படம் யாருக்கு ?

13 மே, 2021 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Who-will-direct-Rajinikanths-next-film?

தமிழ் சினிமாவின் வசூல் நடிகர்களில் முதன்மையானவர் என்ற பெயரை இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நேற்று தான் ஐதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார். சிறிது ஓய்விற்குப் பிறகு ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அரசியலில் இறங்காத காரணத்தால் இன்னும் சில படங்களில் ரஜினிகாந்த் நடிப்பார் என்று ஏற்கெனவே சொல்லப்பட்டது. அண்ணாத்த படத்திற்குப் பிறகு அவர் யாருடைய தயாரிப்பில், யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற பேச்சு இப்போதே எழுந்துவிட்டது.

அமெரிக்கா செல்வதற்கு முன்பாகவே அடுத்த படம் என்ன என்பதை ரஜினிகாந்த் முடிவு செய்வார் என்றும் தெரிகிறது. அமெரிக்காவிலிருந்து திரும்பியதுமே புதிய படத்தில் நடிக்க ஆரம்பிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

தற்போதுள்ள சூழ்நிலையில் ரஜினிகாந்த்தை வைத்து படம் தயாரிக்க அவருடைய மருமகன் தனுஷ், கலைப்புலி தாணு உள்ளிட்ட சிலர் தயாராக இருப்பதாகக் கேள்வி. அதே போல ரஜினிகாந்த்தை சந்தித்து சில இயக்குனர்கள் ஏற்கெனவே கதை சொல்லியிருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

ரஜினிகாந்தின் சம்பளம் 100 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள். அவரை வைத்து படம் தயாரித்தால் குறைந்தபட்சம் 200 கோடி ரூபாய் பட்ஜெட் வேண்டும். அதற்கு யார் தயாராக இருக்கிறார்களோ அவர்களது படத்தில் மட்டும்தான் ரஜினிகாந்த் நடிக்க முடியும்.

தன்னை வைத்து ஏற்கெனவே படங்களைத் தயாரித்தவர்களுக்கு முன்னுரிமை தருவாரா, இதுவரை தன்னை இயக்காத இயக்குனர்களுக்கு வாய்ப்பு தருவாரா என்று கோலிவுட்டில் காத்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர்உதயநிதி படத்தில் ஷிவானி ராஜசேகர் ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம் - அடுத்து யார் ? யார் ? ஆரம்பித்து வைத்த சூர்யா குடும்பம் - ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

M Ramachandran - Chennai,இந்தியா
14 மே, 2021 - 09:30 Report Abuse
M  Ramachandran அண்ணாத்தை முடிந்து விட்டது . இனி வீட்டில் சும்மா ரெடிரிட்மெண்டை குடும்பத்துடன் அனுபவிக்கலாமே? இனி யாருக்காக சம்பாதிக்க வேண்டும். யாரோ அனுபவிக்க போயாகிறார்கள். கட்சி தொடங்கினாலும் அரசியலுக்குகாக செலவு செய்யலாம். கொராணா நிதி தாராள மாக வழங்கலாம் அல்லது மும்பை வில்லன் நடிகர் எள் எளிய மக்களுக்கு சிறிது பகிர்ந்தளிக்கலாம்.
Rate this:
BALOU - st-denis,பிரான்ஸ்
14 மே, 2021 - 08:59 Report Abuse
BALOU ஒரு சில மனிதர்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எதுவும் கிடையாது அதில் ரஜினியும் ஒருவர்
Rate this:
naadodi - Dallas,யூ.எஸ்.ஏ
14 மே, 2021 - 07:53 Report Abuse
naadodi நாட்டுக்கு மிகவும் அதி முக்கியமான செய்தி
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
14 மே, 2021 - 03:50 Report Abuse
Sathish ஓசியில பார்த்தால் தான் உண்டு இனி உன் படத்தை. காசு செலவழித்து பார்க்கிற மாதிரி எண்ணமெல்லாம் எனக்கில்லை.
Rate this:
ramesh - kanchipuram,ஓமன்
14 மே, 2021 - 00:45 Report Abuse
ramesh அடுத்த படம் பெயர் ...RETIREMENT ?
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in