Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛என்னடி முனியம்மா...' பாடல் புகழ் டி.கே.எஸ்.நடராஜன் மறைவு

05 மே, 2021 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Actor-and-singer-T.K.S-Natarajan-passed-away

நடிகரும், என்னடி முனியம்மா பாடல் புகழ் பாடகருமான டி.கே.எஸ்.நடராஜன்(87) உடல்நலக் குறைவால் இன்று(மே 5) காலை 6.30 மணிக்கு காலமானார்.

டி.கே.எஸ். கலைக்குழுவில் சேர்ந்து நாடகங்களில் நடித்து வந்த நடராஜன், அந்த குழுவில் இருந்ததால் டி.கே.எஸ்.நடராஜன் என அழைக்கப்பட்டார். தொடர்ந்து மேடை நாடகங்களில் நடித்தும், பாடியும் வந்தார். 1954ல் ரத்த பாசம் என்ற படம் மூலம் சினிமாவில் நடிகராக களமிறங்கினார். தொடர்ந்து சின்ன வேடங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏராளமான மேடை கச்சேரிகளிலும் பாடி உள்ளார்.

1984ம் ஆண்டு சங்கர் கணேஷ் இசையில் வெளியான வாங்க மாப்பிள்ளை வாங்க என்ற படத்தில் இடம் பெற்ற, ‛என்னடி முனியம்மா உன் கண்ணுல மைய்யி' என்ற பாடல் மூலம் இன்னும் பிரபலமானார் நடராஜன். இதேப்போன்று பல நாட்டுப்புற பாடல்களை அவர் பாடி உள்ளார். இதே என்னடி முனியம்மா பாடல் அர்ஜுன் நடித்த வாத்தியர் படத்தில் ரீ-மேக் ஆனது. அதிலும் பாடி, ஆடியிருந்தார் நடராஜன்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் நடராஜனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5மணிக்கு அன்னாரது இறுதிச்சடங்கு நடக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
இயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனாஇயக்குனர் வசந்தபாலனுக்கு கொரோனா 'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா செல்கிறார் ரஜினி? 'அண்ணாத்த' முடிந்ததும் அமெரிக்கா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sankar - Nellai,இந்தியா
06 மே, 2021 - 09:24 Report Abuse
sankar சிறப்பான ஒரு நாட்டுப்புற பாடல் கலைஞர் - ஆத்ம இறைவன் நிழலில் இளைப்பாறட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in