Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்களுக்கான பல சலுகைகளை அரசு அறிவிக்குமா?

05 மே, 2021 - 11:43 IST
எழுத்தின் அளவு:
Theatre-owners-needs-some-exemption-from-new-government

தமிழ்நாட்டில் புதிய அரசு இன்னும் இரண்டு நாட்களில் பதவியேற்க உள்ளது. அதற்குள்ளாக பல்வேறு துறையினரும் அவர்களது துறைக்காக பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். தமிழ் சினிமா துறையினர் நீண்ட நாட்களாகவே பல கோரிக்கைகளை அரசுக்கு வைத்து வருகின்றனர். அதிலும் கடந்த ஓராண்டு காலமாக கொரானோ தொற்றால் சினிமா தியேட்டர்கள் பல மாதங்களாக மூடியே இருந்தன. சில மாதங்கள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கைளை வைத்துள்ளார்கள். அது பற்றி பேட்டியளித்த சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், “கொரானோ பிரச்சினையால் பல மாநிலங்களில், சொத்து வரி, தொழில் வரி, மின்கட்டணம் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்துள்ளார்கள். அது போல தமிழ்நாட்டிலும் செய்தால் நன்றியுடையவர்களாக இருப்போம். மேலும், இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும்தான் 8 சதவீத உள்ளாட்சி வரி இருக்கிறது, அதையும் நீக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு பதவியில் இருந்த அரசு தியேட்டர்காரர்களின் கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லை. புதிதாகப் பொறுப்பேற்க உள்ள அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் உள்ளார்கள்.

ஒரே நேரத்தில் தியேட்டர்காரர்களின் இத்தனை கோரிக்கைகளையும் புதிய அரசு நிறைவேற்றுமா என்பது விரைவில் தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்குவாரா கமல்ஹாசன் ?'இந்தியன் 2' பஞ்சாயத்தில் ... ஓடிடி வெளியீட்டு சிக்கலில் பெரிய படங்கள் ஓடிடி வெளியீட்டு சிக்கலில் பெரிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Santi -  ( Posted via: Dinamalar Android App )
06 மே, 2021 - 09:16 Report Abuse
Santi 10 rupees பாப்கார்ன், 150 rupees ku vithu கொள்ளை அடிச்சீங்க.. இப்போ வரி கட்ட கஷ்டமாக இருக்கிறது??
Rate this:
Santi -  ( Posted via: Dinamalar Android App )
06 மே, 2021 - 09:14 Report Abuse
Santi நம் நாட்டில், corona அலையில் சிக்கி வருமானம் இன்றி, ஒரு வேளை உணவுக்கு கஷ்ட படுகின்றனர்... அவேர்களே, நகை அடமானம் வைத்து கடன் வாங்கி வரி கட்டும் போது, உன்னை மாதிரி kodeeswarakal வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்பது அசிங்கமான செயல்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in