Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 2' பஞ்சாயத்தில் இறங்குவாரா கமல்ஹாசன் ?

05 மே, 2021 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Will-Kamal-involve-in-Indian-2-issue?

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் 'இந்தியன் 2' படம் கடந்த சில மாதங்களாக பஞ்சாயத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் படத்தை முடித்துக் கொடுக்க வேண்டுமென நீதிமன்றத்தை நாடியது லைகா நிறுவனம். நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.

படத்தின் நாயகன் கமல்ஹாசன், அந்த விவகாரம் நடந்து கொண்டிருந்த போது தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இருந்தார். தேர்தல் முடிந்த பிறகு அவர் இந்த விவகாரத்தில் தலையிடுவார் என திரையுலகத்தில் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், திரை மறைவிலும் எந்த பேச்சுவார்த்தையும் இதுவரையில் நடந்ததாகத் தெரியவில்லை என்கிறார்கள். தேர்தல் முடிவு வந்த பிறகு கமல்ஹாசன், கட்சியினருடன் தான் பேச்சுவார்த்தை நடத்தினாரே தவிர, 'இந்தியன் 2' விவகாரத்தில் எதுவும் நடத்தவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் கமல்ஹாசன் தலையிட்டால் மட்டும் தான் இந்த விவகாரத்திற்கு ஒரு முடிவு கிடைக்கும். சினிமாவை விட்டு தான் அரசியலுக்கு வந்ததால் 300 கோடி ரூபாய் நஷ்டம் வரும் என்று பேசிய கமல்ஹாசன், 'இந்தியன் 2' படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் முதலீடு செய்த 200 கோடி ரூபாயையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதே திரையுலகினரின் கருத்தாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
டுவிட்டரில் பிரியா பவானி சங்கர் மல்லுக்கட்டுடுவிட்டரில் பிரியா பவானி சங்கர் ... தியேட்டர்களுக்கான பல சலுகைகளை அரசு அறிவிக்குமா? தியேட்டர்களுக்கான பல சலுகைகளை அரசு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vira - tamil naadu,பிரான்ஸ்
06 மே, 2021 - 16:44 Report Abuse
vira எவ்வளுவு ஆண்டுகள் எனக்கு வயசு ஆயிடிச்சு
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
05 மே, 2021 - 17:12 Report Abuse
Vasudevan Srinivasan இந்தியன் இரண்டாம் பாகம் மட்டுமல்ல பெரும்பகுதி எடுக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட 'சபாஷ் நாயுடு' படத்தையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கவேண்டும் 'மீண்டும் பலராம நாயுடுவை' காண காத்திருக்கிறோம்..
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
05 மே, 2021 - 13:22 Report Abuse
Vena Suna கமல் அரசியலை விட்டு படத்தை முடித்து கொடுக்க வேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in