Advertisement

சிறப்புச்செய்திகள்

அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலுவுக்கு ஒரு நியாயம், ஷங்கருக்கு ஒரு நியாயமா ?

28 ஏப், 2021 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Is-there-a-justification-for-Vadivelu-and-a-justification-for-Shankar?

இன்றைய மீம் கிரியேட்டர்கள் பலருக்கும் ஆபத்பாந்தவனாக இருக்கும் ஒரே நடிகர் வடிவேலு தான். அவர் நடித்த படங்களில் இருந்துதான் பல புகைப்படங்களை, வீடியோ காட்சிகளை வைத்து பல்வேறு மீம்ஸ்களை ரசிக்கும் வகையில் உருவாக்கி வருகிறார்கள்.

வடிவேலு நடித்து கடைசியாக 2017ல் 'மெர்சல்' படம் வெளிவந்தது. கடந்த நான்கு வருடங்களாக அவர் நடித்த படங்கள் வரவேயில்லை. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' என்ற படத்தை 2017 ஆகஸ்ட் மாதம் அறிவித்து ஆரம்ப கட்டப் படப்பிடிப்பையும் நடத்தினார்கள்.

அதன்பின் வடிவேலு, படத்தை இயக்கிய சிம்புதேவன், தயாரிப்பாளர் ஷங்கர் ஆகியோருக்கிடையே 'படைப்பு வித்தியாசம்' ஏற்பட்டது. வடிவேலு சிலவற்றைக் கேட்க அதை சிம்புதேவனும், ஷங்கரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் பெரிதாக வெடித்து படம் அப்படியே நின்று போனது. படத்திலிருந்து வடிவேலு விலகிக் கொண்டார்.

ஆனால், அப்போது வடிவேலுவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என தயாரிப்பாளர் சங்கத்திடம் முறையிட்டு வடிவேலு தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாதபடி ஷங்கர் ஒரு தடையை உருவாக்கினார் என திரையுலகத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள். 'ரெட்' என்பதையெல்லாம் கடந்த சில வருடங்களாக அதிகாரப்பூர்வமாக எந்த திரையுலக சங்கமும் அறிவிப்பதில்லை. அவர்களுக்குள் விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு ஒரு தடையை உருவாக்கிவிடுவார்களாம்.

தற்போது 'இந்தியன் 2' பட விவகாரத்திலும் இயக்குனர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கும் இடையே விவகாரம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இருவருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.

ஒரு தயாரிப்பாளராக ஷங்கர் 'இம்சை அரசன் 24ம் புலிகேசி' படத்தில் தன்னுடைய பிரச்சினையை அணுகியதற்கும், தற்போது 'இந்தியன் 2' விவகாரத்தில் இயக்குனராக அவர் அணுகுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது கோலிவுட்டில் வருத்தப்படுகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் தான் ஒரு படம் உருவாவதற்கான முதன்மை முதலீட்டாளர்கள் என்பதை இயக்குனர்களும், நடிகர்களும் மறந்துவிடுகிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

சில பல கோடிகளை தயாரிப்பாளர்களாக இழந்ததற்கு மிகவும் வருத்தப்பட்ட ஷங்கர், 'இந்தியன் 2' படத் தயாரிப்பாளர் 200 கோடி வரை செலவிட்டது பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
அல்லு அர்ஜூனுக்கு கொரோனாஅல்லு அர்ஜூனுக்கு கொரோனா ஓங்கி அறைவேன் : சித்தார்த் டுவீட்டால் சலசலப்பு ஓங்கி அறைவேன் : சித்தார்த் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Radj, Delhi - New Delhi,இந்தியா
01 மே, 2021 - 19:27 Report Abuse
Radj, Delhi வடிவேலுக்கு ஒரு சட்டம் ஆனா ஷங்கருக்கு ஒரு சட்டமா. தயாரிப்பாளர் சங்கம் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்க வேணும்.
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
30 ஏப், 2021 - 19:50 Report Abuse
VELAN S சங்கரு கிளப்பிகிட்டு அலைஞ்சார் என்றால் , இந்த ஆஸ்கார் ரவி மற்றும் இந்தியன் 2 காரனுவ எல்லாரும் போட்டிக்கு வடிவேலுவை நடிக்க கொண்டு வரலாமே . அப்படி கொண்டு வந்தா சங்கர் வாயை திறக்க முடியுமா என்ன .
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
30 ஏப், 2021 - 16:39 Report Abuse
J.V. Iyer என்னங்கடா.. ஒண்ணுமே புரியல. ஆனா வடிவேலுவை நடிக்கச்சொல்லுங்கடா...
Rate this:
shakti - vilupuram,கோட்டி டி'ஐவைரி
30 ஏப், 2021 - 12:36 Report Abuse
shakti ஹாசனை வைத்து 200 கோடி முதலீடு செய்த மடையன் யார் ???
Rate this:
சாண்டில்யன் - Paris,பிரான்ஸ்
30 ஏப், 2021 - 06:23 Report Abuse
சாண்டில்யன் சூப்பர் ஸ்டார் எபெக்ட் சேர்வார் தோஷம் ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன கூடுவிட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in