Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேக்கின் ஆசை நிறைவேறாமல் போகுமோ ?

22 ஏப், 2021 - 16:15 IST
எழுத்தின் அளவு:
Will-Viveks-wish-come-true?

மறைந்த நகைச்சவை நடிகர் விவேக் அவருடைய 35 வருட சினிமா வாழ்க்கையில் கமல்ஹாசனுடன் மட்டும் இணைந்து நடித்ததில்லை. அவருடைய அந்த ஆசை நிறைவேறியும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற ஒரு நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பு தற்போது சிக்கலில் நிற்கிறது. இயக்குனர் ஷங்கருக்கும் படத் தயாரிப்பு நிறுவனமான லைக்காவிற்கம் இடையே மோதல் உருவாகி நீதிமன்றம் வரை இந்தப் பிரச்சினை சென்றுவிட்டது.

இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஜுலை முதல் அக்டோபர் வரை நேரம் இருக்கிறது, அப்போது படத்தை முடித்துக் கொடுக்க முயற்சிக்கிறேன் என ஷங்கர் பதிலளித்துள்ளார். அதோடு, படத்தில் விவேக் நடித்த காட்சிகளை மீண்டும் படமாக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

விவேக் நடித்த காட்சிகள் முழுமையாகப் படமாகவில்லை என்பது இதனால் தெரிய வருகிறது. அதன் காரணமாக அவர் நடித்த காட்சிகளை வேறொரு நடிகரை வைத்து மீண்டும் படமாக்க உள்ளதாகவும் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

கமல்ஹாசனுடன் நடிக்காமல் இருந்த அவரது ஆசை இந்தியன் 2 படம் மூலம் ஓரளவிற்கே நிறைவேறியுள்ளது. இப்போது அது படத்தில் இடம் பெற முடியாத ஒரு சூழலும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் அதன் படப்பிடிப்பு மீண்டும் நடந்திருந்தால் விவேக் நடிக்க வேண்டிய காட்சிகளும் படமாக்கப்பட்டிருக்கும்.

தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே எழுந்த பிரச்சினை காரணமாக ஒரு வருடமாக படப்பிடிப்பும் நடக்காமல் போனதால் விவேக்கின் ஆசை நிராசையாகவே முடியப் போகிறது என்பது வருத்தமே.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
13 மில்லியன் மைல்கல்லை கடந்த பூஜா ஹெக்டே13 மில்லியன் மைல்கல்லை கடந்த பூஜா ... சிரஞ்சீவிக்கு தெலங்கானா கவர்னர் தமிழிசை பாராட்டு சிரஞ்சீவிக்கு தெலங்கானா கவர்னர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Manian - Chennai,ஈரான்
23 ஏப், 2021 - 01:27 Report Abuse
Manian Oப்படியும் பாக்கலாமே கமலு எலெக்ஷனின் தோத்து போனா , இந்த அதிரஷ்டம் கெட்ட பயலுடனா நடித்தேன் என்று சொர்க்கத்தில் வருத்தம் இப்போ இல்லையே ம்பு
Rate this:
Muthu Pandi - Al Ain,ஐக்கிய அரபு நாடுகள்
22 ஏப், 2021 - 23:31 Report Abuse
Muthu Pandi விவேக் ஒரு நல்ல மனிதர். இந்த கமல் அற்பனுடன் அவர் நடிக்காதது நல்ல விஷயம் தான். கமல் ஒரு சந்தர்ப்ப வாதி. எல்லாம் நன்மைக்கே
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
22 ஏப், 2021 - 22:20 Report Abuse
vira தயாரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் பிரச்னையா அப்போ கமல் கால் உடைந்து வீட்டில் இருந்தாரே அது என்னவாம் ?
Rate this:
VIJAYAKUMAR - Periyakulam,இந்தியா
22 ஏப், 2021 - 20:05 Report Abuse
VIJAYAKUMAR திரு விவேக் நடித்த காட்சிகள் படப்பிடிப்பு முடிந்தவரை எடுத்தகாட்சிகள் அப்படியே இருக்கட்டும் அதன்பிறகு எடுக்க வேண்டிய காட்சிகளை வேறு நடிகரை வைத்து "இனிமேல் இவர்" என குறிப்புடன் படப்பிடிப்பை முடித்து வெளியிடலாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in