Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

இளம் கன்னட நடிகர் கொரோனவுக்கு பலி

20 ஏப், 2021 - 12:53 IST
எழுத்தின் அளவு:
Kannada-actor-dead

கன்னட சினிமாவில் வளர்ந்து வந்த இளம் நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத். கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா, சம்யுத்தா படங்களை அவரே தயாரித்து நடித்தார். ஜீரோ பிரசன்ட் காதல் என்ற படத்தை தயாரித்து நடித்து வந்தார். இந்த படத்தை வருகிற ஜூன் 22ந் தேதி தனது பிறந்த நாளில் வெளியிட திட்டமிட்டிருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுநாத்துக்கு கடந்த வாரம் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையில் அவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டது. அற்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உடல்நிலை மோசமடைய ஐசியூவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. என்றாலும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக தொற்று பிரச்சினை இருந்ததும், அதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. 35 வயதான மஞ்சுநாத்தின் மரணம் கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு படப்பிடிப்புக்காக காஷ்மீரில் முகாமிட்டுள்ள துல்கர் சல்மான்தெலுங்கு படப்பிடிப்புக்காக ... கொரோனா தாக்குதல்: ஆச்சார்யா படப்பிடிப்பு நிறுத்தம் கொரோனா தாக்குதல்: ஆச்சார்யா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

karutthu - nainital,இந்தியா
21 ஏப், 2021 - 10:20 Report Abuse
karutthu அய்யோ பாவம் இந்த சின்ன வயசில் இப்படி ஒரு அகால மரணமா? அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்திக்கிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in