Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ்நாட்டில் தியேட்டர்களை மூட முடிவு?

19 ஏப், 2021 - 11:52 IST
எழுத்தின் அளவு:
TN-Theatres-to-be-shut-down?

கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நேற்று சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இரவு நேரங்களில் ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நாளை(ஏப்., 20) முதல் அமலாக உள்ளது.

இதனால் தியேட்டர்களில் இரவு நேரக் காட்சிகள் நடைபெற முடியாது. ஏற்கெனவே 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஞாயிற்றுக்கிழமைகளில் தான் மக்கள் தியேட்டர்களுக்கு அதிகமாக வருவார்கள். அன்றைய தினம் முழு ஊரடங்கு என்பதால் யாரும் வர முடியாது.

இந்நிலையால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகக் கூறி தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கிற்கு எதிர்பப்புத் தெரிவித்து தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை மூட முடிவு செய்ய உள்ளனராம். இது பற்றி தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தெரிவித்தார். நாளை அவர்கள் கலந்து பேசி முடிவுகளை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ஏற்கெனவே 112 தியேட்டர்கள் மூடப்பட்டுவிட்டதாகவும், இன்னும் 200 தியேட்டர்கள் மூடும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

தியேட்டர்கள் மூடப்பட்டால் 50 சதவீத இருக்கைகள் இருந்தாலும் படங்களை வெளியிடத் தயாராக இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள். கடந்த ஒரு வருட காலமாகவே தத்தளித்து வரும் தமிழ்த் திரையுலகம் தற்போதைய கொரானோ பரவல் காரணமாக மேலும் பாதிப்படையும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
இந்தியன் 2 : கமல்ஹசானுடன் நடித்து முடித்த விவேக் ?இந்தியன் 2 : கமல்ஹசானுடன் நடித்து ... ஒரு படத்தை 267 முறை பார்த்த நடிகை ஒரு படத்தை 267 முறை பார்த்த நடிகை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

angel -  ( Posted via: Dinamalar Android App )
20 ஏப், 2021 - 13:51 Report Abuse
angel better close it all theatre other states peoples irritating why all tamilian mad with cinema and actors and actress behind
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
20 ஏப், 2021 - 10:09 Report Abuse
Paraman இந்த கேடுகெட்ட சினிமா, ஐபிஎல் எல்லாத்தையும் ஒரு 2-3.வருஷத்திற்கு தடை செய்ய வேண்டும். செய்தால் நாடு உருப்படும், கறுப்புப்பணம் குறையும், அதனால் மக்களின் வாழ்வாதாரம் உயரும், விலைவாசி குறையும். ஆன்மீகம் என்ற பெயரில் உலவும் போலி அமைப்புகள் மடங்கள், வக்ப் போர்டு, திருச்சபை அமைப்புகள் போன்றவற்றின் வருமானம் முழுவதும் முறையாக தணிக்கை செய்யப்பட்டு முழு வருமான வரி விதிக்கப்பட்டால், இந்த கொரானா காலத்திலும் இந்தியா முன்னேறும். பத்ம விருதுகள் சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள், போன்ற வர்களுக்கும் , விஞ்ஞானிகள், ராணுவ வீரர்களுக்கு மட்டுமே உரிதாக்கப்பட வேண்டும்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
20 ஏப், 2021 - 05:33 Report Abuse
Sathish மக்கள் உயிரை விட தயாரிப்பாளர்கள் முக்கியம். ரொம்ப நல்லா இருக்குங்க உங்க எண்ணம். கொரோனா ஓயட்டும் அப்புறம் நடத்துங்க உங்க வீணாபோன சினிமா வியாபாரத்தை.
Rate this:
19 ஏப், 2021 - 19:51 Report Abuse
மாரி கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை அலைகழிக்கிறது... அரசாங்கம் விழி பிதுங்கி நிற்கிறது ...இப்பவும் மக்கள் படம் பார்க்க வரணும்னு சொல்ற இவர்களை பார்க்க கோபம் வருகிறது ....முடிந்தால் தியேட்டரை பெட் போட்டு கோரோனா சமயத்தில் உதவுங்கள்
Rate this:
Maatram makkalidathil irundhu varavendum - chennai,இந்தியா
19 ஏப், 2021 - 18:51 Report Abuse
Maatram makkalidathil irundhu varavendum Oru padam orey oruvanaala thaan vetri nu solli avanukku kadhaanayagan oru pattam koduthu Kodi kodiya panamum koduthu. Andha padathula vela seiyura meethi (over 90%) perukku verum soru pottu sorppa panatha sambalaama koduthu onnu illa ru pera mattum sezhlippa vaalavekkura cinema irundha enna illana enna ?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in