Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாதிய மோதலை கிளறி விடுகிறதா கர்ணன் ?

12 ஏப், 2021 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Is-Karnan-movie-stirring-up-caste-conflict?

சினிமாவில் இப்போது இருக்கும் தணிக்கை முறையைப் போல அந்தக் காலம் தொட்டே இருந்திருந்தால் இதற்கு முன்பு வந்த சாதிய படங்கள் பல வராமலே போயிருக்கும். அப்படி பல சாதிப் பெருமைகளைச் சொல்லி வந்த படங்கள் நிறையவே உண்டு. ஆனால், இப்போது எந்த ஒரு சாதியைப் பற்றியும் வெளிப்படையாகவோ, ஏன் மறைமுகமாகவோ கூட சொல்ல முடியாது. வேண்டுமானால் 'குறியீடு' மூலமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சாதிய கருத்துக்களை முன் வைத்து சில படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் சில படங்கள் அந்த மக்களின் பிரச்சினைகளை, தேவைகளைப் பேசினாலும் சில காட்சிகள் மற்ற சாதிகள் மீதான வன்மத்தை குறியீடு மூலம் கோடிட்டும் காட்டுவது தேவையற்ற மோதல்களை உருவாக்கி விடுகிறது.

தற்போதைய தலைமுறையினர் முடிந்த அளவிற்கு சாதி பாகுபாடு பார்க்காமல் பழகி வருகிறார்கள். ஆனால், அவர்களிடத்தில் இந்த மாதிரியான படங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒரு பாகுபாட்டை விதைத்து விடுகின்றன.

கடந்த வாரம் வெளிவந்த 'கர்ணன்' படம் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு சாதிய மோதலை, கருத்து மோதலை, சிலரிடம் வன்மத்தை வெளிப்படுத்தும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

படத்தை ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் பலரும் பலவிதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். சாதி என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி போலத்தான். எப்போது எந்தப் பக்கம் பதம் பார்க்கும் என்பதைச் சொல்ல முடியாது.

தங்களைப் பற்றி தங்கள் பெருமையைப் பற்றி ஒரு குறிப்பிட்ட சமூகம் பேசிக் கொள்ளும் போது யாரும் கவலைப்பட மாட்டார்கள். அதே சமயம் மற்ற சமூகத்தைப் பற்றி ஏதோ ஒன்று சொல்லப் போனாலும் அந்த மற்ற சமூகத்தினர் அவர்கள் பக்கத்து வாதத்தை எடுத்து வைக்க முன் வருவார்கள்.

ஒரு காலத்தில் நடந்து போன, மறக்க வேண்டிய வரலாற்று விஷயங்களை மீண்டும் ஞாபகப்படுத்திப் பார்ப்பது ஒரு பதிவா, அல்லது பாதிப்பா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சினிமா என்பது ஒரு சக்தி வாய்ந்த ஊடகம், அதை 'சாதி' என்ற குறுகிய வட்டத்திற்குள் அடைத்துவிடாதீர்கள் படைப்பாளிகளே....

Advertisement
கருத்துகள் (44) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் வரப்போகும் 'சூப்பர் ஸ்டார்' சர்ச்சைமீண்டும் வரப்போகும் 'சூப்பர் ... ஆந்திராவில் டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா ? ஆந்திராவில் டிக்கெட் விலை எவ்வளவு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (44)

Aryan - Dupuma,பெலிசி
17 ஏப், 2021 - 12:48 Report Abuse
Aryan ஆதிக்க சாதியினராக பிராமணர்களை காட்டியிருந்தால் , இத்தனை விமர்சனமும் எதிர்ப்பும் வந்திருக்காது . உண்மையான ஆதிக்க சாதியினரின் ஆதரவு கிட்டியிருக்கும் .
Rate this:
Vijay - Chennai,இந்தியா
13 ஏப், 2021 - 11:00 Report Abuse
Vijay இவனுங்க கடைசி வரைக்கும் படிச்சி முன்னேற மாட்டாங்க. எங்களை இப்படி செஞ்சித்தாங்க அப்படி செஞ்சிட்டாங்கன்னு சொல்லி சொல்லியே காலத்தை ஓட்டுவாங்க.
Rate this:
Raja - Chennai,இந்தியா
13 ஏப், 2021 - 10:39 Report Abuse
Raja அது எப்படி உங்களுக்கு திரௌபதி படம் மட்டும் தப்பு, இந்த படம் மட்டும் நல்லது?
Rate this:
Mani Iyer - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13 ஏப், 2021 - 10:23 Report Abuse
Mani Iyer அருமையான படம் "கர்ணன்" நல்ல திரைக்கதை, தேர்ந்தெடுத்த நடிகர் நடிகையர்கள் நம்மை படத்துடன் ஒன்றிட செய்யும் வகையில் இருக்கும் கதை சண்டைக்காட்சிகளும் அபாரம் , தனுஷை அருமையாக கையாண்டுள்ளனர் கர்ணனும் அர்ஜுனனும் பாடல்களும் ஆஹா, அதுவும் அந்த கிளைமாக்ஸில் வரும் "உள்ளத்தில் நல்ல உள்ளம்" பாடல், அழுதேவிட்டேனய்யா சிவாஜி நடிப்பு அற்புதம்
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
13 ஏப், 2021 - 10:20 Report Abuse
vbs manian சந்தேகமே இல்லை.
Rate this:
மேலும் 39 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in