Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தீபாவளியில் மோதும் ரஜினி, கமல்?

09 ஏப், 2021 - 12:37 IST
எழுத்தின் அளவு:
Rajini---Kamal-to-clash-after-long-time?

ஒரு காலத்தில் ரஜினி, கமல் நடித்த படங்கள் தீபாவளி அன்று வெளியானால் இருவரின் ரசிகர்களுக்குமே அது டபுள் தீபாவளியாக இருக்கும். கமல்ஹாசன் நடித்த கல்யாண ராமன் படம் வெளியான தீபாவளி அன்று தான் ரஜினி நடித்த ஆறிலிருந்து 60 வரை படம் வெளியானது. ரஜினி நடித்த மனிதன் படம் தீபாவளி ரிலீஸாக வெளியானது. அதே நாளில் கமல்ஹாசனின் நாயகன் படமும் வெளியானது. கடைசியாக ரஜினி நடித்த சந்திரமுகி மற்றும் கமல் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது

இந்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி, கமல் படங்கள் மோதும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனாலும் ஊரடங்கு காலத்திலேயே படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தையுமே முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. மே 3ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி, 100 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்தையும் தீபாவளிக்கு வெளியிடலாம் என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் தீபாவளிக்கு அண்ணாத்த மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஜினி - கமல் ஆகியோரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி இருக்கும். என்று தெரிகிறது. என்றாலும் இது நடப்பது கொரோனாவின் கையில்தான் இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மாஸ்டர் தந்த அடையாளம் - லோகேஷ் கையால் காரை பெற்ற மகேந்திரன்மாஸ்டர் தந்த அடையாளம் - லோகேஷ் கையால் ... தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் ஜி.வி.பிரகாஷ் படம் தமிழ் புத்தாண்டில் ஒளிபரப்பாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

haresh - Salem,இந்தியா
10 ஏப், 2021 - 13:08 Report Abuse
haresh இட் வில் பி எ ஹெல்த்தி கிளாஷ் .. அஜித் விஜய் ஸ்டில் அண்டர் ஹேவி காம்ப்படீஷண் ஃப்ரம் தி சீனியர்ஸ்.. தலைவர்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
09 ஏப், 2021 - 19:51 Report Abuse
Vasudevan Srinivasan Surely This will not happen Because of the Theatre Shortage And Collection Focus.
Rate this:
KayD -  ( Posted via: Dinamalar Android App )
09 ஏப், 2021 - 14:49 Report Abuse
KayD Sorry sirThose days are gone.. எந்த காலத்தில் இருக்கீங்க.. Rajni படத்துக்கு அவுங்க veetila யாராவது வருவாங்க la nu தெரியல கமல் படத்துக்கு அவர் daughters கூட வருவார் கூட மய்யம் la இருந்து ரெண்டு பேர்...but படம் interesting aa irundhaa konjan kootam வரும் இல்லைனா fsfs laya வெற்றி விழா kobdadapadum. Current fans thinking வேர... இது விஜய் ajith ஆட்சி காலம்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
09 ஏப், 2021 - 14:32 Report Abuse
Sathish ரசிகர்கள் போட்டிபோட்டுக்கொண்டு படம் பார்த்து நாட்டை காப்பாற்ற போகிறார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in