Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

‛அண்ணாத்த' படப்பிடிப்பு : தனி விமானத்தில் ஐதராபாத் பறந்த ரஜினி

08 ஏப், 2021 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Rajini-fly-to-hyderabad-for-Annatha-shooting

அண்ணாத்த படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு தனி விமானத்தில் சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அண்ணாத்த'. இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் கடந்தாண்டு நடந்தது. கொரோனா பிரச்னை ஏற்பட்டதால் படப்பிடிப்பு நின்றது. பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு நடத்த அனுமதி வழங்கப்பட்டதும், மீண்டும் ஐதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கினர். அப்போது அங்கு படக்குழுவில் நால்வருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதோடு ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு நின்றது. அதோடு சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி வந்த ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் இனி இல்லை என அறிவித்தார்.

பிறகு சமீபத்தில் சென்னையில் அண்ணாத்த படப்பிடிப்பை தொடங்கினர். இங்குள்ள கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் மற்றும் சில காட்சிகள் படமாக்கப்பட்டன. ரஜினியும் சில நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்றார். தற்போது மீண்டும் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் அண்ணாத்த படப்பிடிப்பு நடக்கிறது. இதற்காக இன்று(ஏப்.,8) காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் பறந்து சென்றார் நடிகர் ரஜினிகாந்த்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா அறிகுறி : இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதிகொரோனா அறிகுறி : இயக்குனர் ... விஜய் 65 : ஜார்ஜியா பறந்தார் பூஜா ஹெக்டே விஜய் 65 : ஜார்ஜியா பறந்தார் பூஜா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

C. Sorna Rajeswari - PUDUR AMBATTUR CHENNAI,இந்தியா
08 ஏப், 2021 - 22:58 Report Abuse
C. Sorna Rajeswari உடல் நிலையை காரணம் கூறி அரசியலுக்கு வரவில்லை என்றவர் அதே போல் சினிமாவை விட்டு விலகினால் ரசிகர்கள் நம்புவார்கள். அரசியலுக்கு வந்தால் உடல் நிலை தாங்காது, ஷுட்டிங் போனால் உடல் நிலை பாதிக்காதா? என்பதே ஏமாற்றப்பட்ட ரசிகர்களின் ஆதங்கம் ஆகும்.
Rate this:
vira - tamil naadu,பிரான்ஸ்
08 ஏப், 2021 - 20:43 Report Abuse
vira Suntv private jet
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in