Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாதவன் படத்தை பாராட்டிய பிரதமர்

06 ஏப், 2021 - 17:28 IST
எழுத்தின் அளவு:
PM-reacts-to-Madhavan-and-his-Rocketry-film

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி, ‛ராக்கெட்ரி நம்பி விளைவு' என்ற பெயரில் படமாக எடுத்து, நடித்து, இயக்கி உள்ளார் மாதவன். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன் வெளியாகி கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் சமூகவலைதளத்தில், ‛‛சில வாரங்களுக்கு முன் நம்பி நாராயணன் உடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்தேன். படத்தின் சில காட்சிகளை பிரதமருக்கு போட்டுக் காட்டினோம். அதை பார்த்துவிட்டு தமது கருத்தினை தெரிவித்தார். மேலும் நம்பி நாராயணன் விவகாரத்தில் தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது குறித்தும் கேட்டறிந்தார்'' என பதிவிட்டார் மாதவன்.

இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டரில், ‛‛உங்களையும்(மாதவன்), புத்திசாலியான நம்பி நாராயணனையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த படம் ஒரு முக்கியமான விஷயத்தை உள்ளடக்கி உள்ளது. இதை மக்கள் அறிய வேண்டும். நமது விஞ்ஞானிகள் மிகப்பெரிய தொழில்நுட்ப வல்லுநர்கள். நம் நாட்டிற்காக பெரும் தியாகங்களை செய்துள்ளனர் என்பதை இப்படத்தின் காட்சிகளில் காண முடிந்தது என தெரிவித்துள்ளார்.

பிரதமரின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாதவன்.

1994ல் ராக்கெட் தொழில்நுட்பங்களை வெளிநாட்டிற்கு விற்றதாக குற்றம்சாட்டப்பட்டு நம்பி நாராயணனை கைது செய்தது புலனாய்வுத்துறை. ஆனால் அவர் குற்றமற்றவர் என்பது பின்னர் நிரூபணமானது. ஆனால் இந்த குற்றச்சாட்டு மற்றும் வழக்கினால் மனதளவில் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்கு தான் ஆளானதை ஒரு புத்தகமாக எழுதியிருந்தார் நம்பி நாராயணன். அதை மையமாக வைத்துதான் இப்போது ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை இயக்கியிருக்கிறார் மாதவன்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சர்வதேச பட விழாக்களுக்கு செல்லும் சின்னஞ்சிறு கிளியேசர்வதேச பட விழாக்களுக்கு செல்லும் ... ஷங்கர் படத்தில் சிரஞ்சீவி ஷங்கர் படத்தில் சிரஞ்சீவி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
07 ஏப், 2021 - 00:52 Report Abuse
Pugazh V இங்கே தமிழக பாஜக வினர் நடிகர்களைக் "கூத்தாடிகள்" என்று ரொம்ப அநாகரிகமாக எழுதுகிறார்கள். ஆனால் அங்கே பாஜக தலைவர், ரஜினி யை தலைவா ங்கறார். இதோ இப்போது மாதவனைப் புகழ்கிறார். குஷ்பு கவுதமி க்கு ஸீட் லாம் குடுக்கறார். தமிழக பாஜக முகத்தில் கரி பூசிட்டர் போங்கோ.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in