இயக்குனர் சுந்தர்.சிக்கு கொரோனா | நேரடியாக டிவியில்.... ‛சர்பத்' - ஞாயிறு திரைப்படம் | ஷங்கரின் பான் இந்தியா படத்தில் பல பிரபல ஹீரோக்கள் | கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம் | தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு | மீண்டும் தனி விமானப் பயணத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் | வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித் | யோகிபாபுவின் மண்டேலா படத்திற்கு எதிர்ப்பு : போலீசில் புகார் | மாளவிகாவும் வெள்ளிக்கிழமை பைக் சவாரியும் | முதலில் துப்பாக்கி... அடுத்தது கத்தி : சூர்யா 40ல் புது ட்விஸ்ட் |
செண்பா கிரியேஷன்ஸ் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் சின்னஞ்சிறு கிளியே. பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். செந்தில் நாதன், சாண்ட்ரா நாயர், அர்ச்சனா சிங், லீலா, செல்லதுரை, பாலாஜி சண்முக சுந்தரம், குரு உள்பட பலர் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குனர் சபரிநாதன் முத்துப்பாண்டியன் கூறியதாவது: இப்படம் தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத்துள்ள படமாக உருவாகியுள்ளது. படத்தை பல சர்வதேச திரைப்பட விழாவுக்கு அனுப்பியுள்ளோம். விரைவில் இப்படம் திரைக்கு வரவிருக்கிறது என்றார்.