Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராம்சரணுக்கு மற்றுமொரு பிறந்தநாள் பரிசு

27 மார், 2021 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-comments-about-Ramcharan-RRR-movie-poster

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படம் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதை அடுத்து, படத்தின் போஸ்டர், டீசர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு பிரமோசனிலும் ஈடுபட்டுள்ளார் ராஜமவுலி.

அந்த வகையில் நேற்றைய தினம் ராம்சரணின் பிறந்தநாள் என்பதால் அவரது போஸ்டர் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டிருந்தார் ராஜமவுலி. அதில் ராமரை போன்று வில்லை வளைத்து அதிரடி போஸ் கொடுத்திருந்தார் ராம்சரண். அதற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

அதையடுத்து, அல்லூரி சீதா ராமராஜாவாக தன்னை வெளிப்படுத்தும் அந்த புதிய போஸ்டர் தைரியம், மரியாதை மற்றும் நேர்மை இதையெல்லாம் வரையறுத்த மனிதன். அல்லூரிசீதா ராமராஜூவின் வேடத்தில் நடிப்பது எனது பாக்கியம் என்று ராம் சரண் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதுப்பற்றி, ராம்சரணின் தந்தையான சிரஞ்சீவி, அந்த போஸ்டருக்கு ஆச்சர்யப்படுத்தல் என்று ஒரே வார்த்தையில் டுவீட் செய்திருந்தார். அதோடு, இன்றைய தினம் சிரஞ்சீவி, ராம் சரண் இணைந்து நடித்து வரும் ஆச்சார்யா படத்தின் ஒரு போஸ்டரும் ராம்சரணின் பிறந்த நாள் பரிசாக வெளியிடப்பட்டுள்ளது.


துப்பாக்கியை வைத்துக்கொண்டு போராட்ட வீரர்கள் போல சிரஞ்சீவியும் ராம்சரணும் நடந்துவரும் அந்த போஸ்டரை பார்க்கும்போதே, படம் குறித்த ஆர்வத்தை தூண்டுகிறது. கொரட்டால சிவா இயக்கிவரும் இந்தப்படத்தை ராம்சரண் தானே தயாரித்துள்ளார். ஆரம்பத்தில் கெஸ்ட் ரோலில் தான் ராம்சரண் நடித்துள்ளார் என்றும் சொல்லப்பட்டாலும், படம் முழுதும் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக அவரே கூறியுள்ளார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும் ராம்சரணுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் இயக்கும் படத்தில் மாற்றங்கள் சொன்ன மகள்மோகன்லால் இயக்கும் படத்தில் ... வக்கீல் சாப் டப்பிங்கை முடித்த பவன் கல்யாண் வக்கீல் சாப் டப்பிங்கை முடித்த பவன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in