Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தேசிய விருது - கங்கனா ரணவத்துக்கு பிறந்தநாள் பரிசு

22 மார், 2021 - 19:41 IST
எழுத்தின் அளவு:
National-award-is-Birthday-gift-to-Kangana

2019ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று(மார்ச் 22) அறிவிக்கப்பட்டன. தமிழ் சினிமாவிற்கு மொத்தமாக 7 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ், ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாயுடன் பகிர்ந்து கொள்கிறார். சிறந்த நடிகைக்கான விருது ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்திற்குக் கிடைத்துள்ளது.

'மணிகர்ணிகா, பங்கா' ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது. 'மணிகர்ணிகா' படத்தில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை ஜான்சிராணி கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

கபடி விளையாட்டு வீராங்கனையாக இருந்து திருமணத்திற்குப் பின் குழந்தை பெற்று, ரயில்வேலைக்குச் சென்று பின் மீண்டும் எப்படி வீராங்கனையாக மாறுகிறார் என்ற கதையைக் கொண்ட 'பங்கா' படத்தில் கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

இரண்டு படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடித்திருந்த கங்கனாவின் நடிப்பை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டி இருந்தனர். தற்போது அதற்காக தேசிய விருது கிடைத்துள்ளது.

இதற்கு முன்பு 2008ம் ஆண்டு 'பேஷன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காகவும், 2014ம் ஆண்டு 'குயின்' படத்திற்காகவும், அடுத்து 2015ம் ஆண்டு 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' படத்திற்காகவும் மூன்று முறை தேசிய விருது வென்றுள்ளார். தற்போது 4வது முறையாக தேசிய விருதை வென்றுள்ளார் கங்கனா.

நாளை(மார்ச் 23) கங்கனாவுக்கு பிறந்தநாள். இன்று அறிவிக்கப்பட்டுள்ள தேசிய விருத அவருக்கு பிறந்தநாள் பரிசாக அமைந்துள்ளது. நாளை கங்கனா நடித்துள்ள 'தலைவி' படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அய்யப்பனும் கோஷியும் ஹிந்தி ரீமேக்கில் அபிஷேக் பச்சன்அய்யப்பனும் கோஷியும் ஹிந்தி ... ஷாரூக்கான் பட வேலைகளை தொடங்கிய அட்லி ஷாரூக்கான் பட வேலைகளை தொடங்கிய அட்லி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Manian - Chennai,ஈரான்
24 மார், 2021 - 05:01 Report Abuse
Manian கோபத்தை அடக்க ஒத்துழைத்தால் .. போல் இல்லாமல் ஒரு நல்ல கணவனும் கிடைப்பான். சிறந்த நடிகை, ஆழ்ந்த கடந்த கால மன பரிசோதனை தேவை ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in