Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹிந்தியில் அந்நியன் : ரன்வீரை வைத்து ரீ-மேக் செய்யும் ஷங்கர்

19 மார், 2021 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Shankar-to-remake-Anniyan-in-hindi-with-Ranveer-Singh?

ரஜினியை வைத்து 2.0 படத்தை இயக்கிய ஷங்கர், அதையடுத்து கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்தார். இந்த படத்தையும் 2.0 படத்தை தயாரித்த லைகா நிறுவனமே தயாரித்து வருகிறது. ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து, லாக்டவுன் போன்ற காரணங்களால் சில தடைகளை சந்தித்து வந்தது இந்தியன் 2 படப்பிடிப்பு.

தற்போது கமல் தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டதால் மீண்டும் இதன் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என தெரியவில்லை. இதன்காரணமாக, தற்போது தெலுங்கில் ராம் சரண் நடிப்பில் புதிய படவேலைகளை ஷங்கர் தொடங்கிவிட்டார். தில்ராஜூ தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ராம்சரண் படத்தை அடுத்து ஹிந்தியில் ரன்வீர் சிங்கை வைத்து இன்னொரு படத்தையும் ஷங்கர் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2005ல் விக்ரமை வைத்து தான் இயக்கிய அந்நியன் படத்தைதான் ஹிந்தியில் ரீமேக் செய்கிறாராம் ஷங்கர். ராம்சரண் நடிக்கும் படவேலைகள் முடிந்ததும் ரன்வீர்சிங் நடிக்கும் படம் உடனடியாக தொடங்கப்பட உள்ளதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திருப்புமுனை தந்த இயக்குனருக்கு நன்றி சொன்ன தமன்னா!திருப்புமுனை தந்த இயக்குனருக்கு ... பாரதிராஜா, உஷா ராஜேந்தர் சங்கங்களுக்கு எதிராக வழக்கு : நீதிமன்றம் நோட்டீஸ் பாரதிராஜா, உஷா ராஜேந்தர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in