ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி | போதைக்கு எதிராக போராடும் சாலா | உறுப்பினர்கள் பற்றி அவதூறு பரப்பினால் நடவடிக்கை: தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை |
தேசிய விருது பெற்ற இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இயற்கை, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை, ஈ போன்ற முக்கியமான படங்களை இயக்கினார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தை இயக்கி வருகிறார்.
லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த எஸ்.பி.ஜனநாதனுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜனநாதனுக்கு மூளையில் ரத்தகசிவு ஏற்பட்டு, மூளை செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. ரத்த கசிவை நீக்க டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். என்றாலும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
விஜய்பேதுபதி அடிக்கடி டாக்டர்களுடன் பேசி வருகிறார். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வெளிநாட்டு டாக்டர்களை வேண்டுமானாலும் வரவழையுங்கள் என்று அவர் கூறி வருகிறார். இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார்கள். ஜனநாதன் உயிர்பிழைக்க வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.