Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்

23 பிப், 2021 - 13:30 IST
எழுத்தின் அளவு:
Good-news-for-Ajith-fans

அஜித் பட அறிவிப்பென்றாலே திருவிழாவாகக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள் அவரது ரசிகர்கள். சமீபத்தில் அப்படித்தான் கண்ணில் பட்ட பிரபலங்களிடம் எல்லாம் வலிமை பட அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரிக்க, ஒரு கட்டத்தில் அறிக்கை வாயிலாக அஜித்தே அவர்களைக் கண்டிக்கும் நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைக்கும் நிலையில் அவரது பட ரிலீஸ் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அஜித்தின் திரையுலகப் பயணத்தில் பெரும் திருப்புமுனையைத் தந்த படங்களில் ஒன்றான பில்லா மீண்டும் ரிலீசாக இருக்கிறது. அடுத்த மாதம் (மார்ச் 12-ந் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் பில்லாவை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்து உள்ளனராம்.

கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் வெளியான இப்படம் மாபெரும் ஹிட் ஆனது. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, நமீதா ஆகியோர் நடித்திருந்தனர். ரஜினியின் பில்லா பட ரீமேக் தான் இந்தப்படம் என்றாலும், மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
வசந்தபாலன் படத்தில் சுரேஷ் சக்கரவர்த்திவசந்தபாலன் படத்தில் சுரேஷ் ... குடும்பத்துடன் உப்பென்னா படம் பார்த்த பாலகிருஷ்ணா குடும்பத்துடன் உப்பென்னா படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD -  ( Posted via: Dinamalar Android App )
23 பிப், 2021 - 17:51 Report Abuse
KayD ஒரு பயல் வரமாட்டான்..that includes Ajith fans (online la available and அவுங்க phone layae irukm) .. Waste of time and money... Yaarku ivalvu பெரிய brilliant idea வந்துச்சு nu தெரியல
Rate this:
postbox0078 - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24 பிப், 2021 - 15:25Report Abuse
postbox0078இல்ல நண்பா சில பேர் பார்ப்பார்கள் ஒன்லைன்ல இருந்தாலும் இந்த படம் திரைஅரங்குல போயி பாக்குறது ஒரு தனி கெத்தா இருக்கும்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Aranmanai 3
  • அரண்மனை 3
  • நடிகர் : ஆர்யா ,
  • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :சுந்தர் சி
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in