'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
புச்சி பாபு இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அறிமுக நடிகர்கள் வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி நடித்து தெலுங்கில் வெளியான படம் 'உப்பெனா'. படத்தில் நாயகன், நாயகி அளவிற்கு படத்தின் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தைப் பற்றி விமர்சகர்களும், தெலுங்குத் திரையுலகத்தின் பல பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள். அனைவரும் மறக்காமல் தமிழ் நடிகரான விஜய் சேதுபதியைப் பற்றியும் குறிப்பிடுவார்கள். ஆனால், நேற்று இப்படத்தைப் பற்றிப் பாராட்டி டுவீட் செய்த நடிகர் மகேஷ் பாபு, விஜய் சேதுபதி பற்றி எதுவுமே சொல்லவில்லை. வேண்டுமென்றே விஜய் சேதுபதியைப் பற்றி குறிப்பிடாமல் விட்டாரா அல்லது மறந்துவிட்டாரா என்று தெரியவில்லை. கமெண்ட்டுகளில் ரசிகர்கள் அது பற்றி கேட்டதற்கும் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
“உப்பெனா, ஒரு வார்த்தையில்..கிளாசிக். இயக்குனர் புச்சிபாபு, நீங்கள் காலத்தால் மறக்க முடியாத ஒரு படத்தைக் கொடுத்துவிட்டீர்கள், உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். உப்பெனா படத்தின் இதயம் தேவிஸ்ரீபிரசாத். சிறந்த இசைக்காக இந்தப் படம் நினைவு கூறப்படும். டிஎஸ்பி இதுவரையிலான உங்களின் சிறந்த படம் இது.
இரண்டு புதுமுகங்கள், மிகச் சிறந்த நடிப்பை வழங்குவது இதயத்தைத் தூண்டுகிறது. வைஷ்ணவ், கிரித்தி நீங்கள் இருவரும் ஸ்டார். கடைசியாக, இயக்குனர் சுகுமார், மைத்திரி நிறுவனம் ஆகியோருக்கு இப்படத்திற்குப் பின்னணியாக இருந்ததற்கு நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.
எல்லாரையும் பாராட்டியவர் விஜய் சேதுபதியை மறந்தது ஏனோ ?.