'டாப் டக்கர்' ஹிட் : மீண்டும் ஹிந்திக்குச் செல்வாரா யுவன் ஷங்கர் ராஜா | 'சாணி காயிதம்' படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் | ஐந்து தெலுங்குப் படங்களில் நடிக்கும் அடா சர்மா | தெலுங்கில் 11 வருடங்கள், நன்றி தெரிவித்த சமந்தா | மார்ச்சில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்? | பிசாசு -2 படத்தில் விஜய் சேதுபதி | நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை - பிரபு | நதிகளிலே நீராடும் சூரியன் : சிம்பு - கவுதம் பட தலைப்பு | த்ரிஷ்யம்-3 க்ளைமாக்ஸை முடிவு செய்துவிட்ட ஜீத்து ஜோசப் | மகேஷ்பாபு - சுகுமார் ; கசப்புகளை மறக்க வைத்த உப்பென்னா |
பகல் நிலவு சீரியல் மூலம் அறிமுகமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்தார். அதோடு தனது சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சிப் புகைப்படங்களாக வெளியிட்டு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்களை சேர்த்து வைத்திருக்கிறார். சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 4ல் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமாகி விட்டார்.
இந்நிலையில் ஷிவானி தனது செல்லநாய்க்கு முதல் பிறந்தநாளை வித விதமான 5 கேக்குகளுடன் விமர்சையாக கொண்டாடி இருக்கிறார். இந்தக் கொண்டாட்டத்தில் ஷிவானியின் நண்பர்களும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடன் பங்கேற்றவர்களான பாலாஜி, சம்யுக்தா மற்றும் ஆஜித் போன்றோரும் கலந்து கொண்டனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷிவானி தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதைப் பார்த்த நெட்டிசன்கள் சிலர், 'நாய்க்கெல்லாம் பிறந்தநாள் கொண்டாடுவதா.. இதெல்லாம் டூமச்' என ஷிவானியை திட்டி வருகின்றனர்.