Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலர் தினத்தில் ஆச்சரியப்பட வைத்த காஜல் அகர்வால்

16 பிப், 2021 - 11:12 IST
எழுத்தின் அளவு:
Kajal-surprise-on-valentines-day

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது தமிழில் இந்தியன் 2 படத்திலும், தெலுங்கில் ஆச்சார்யா படத்திலும் நடித்து வருகிறார்.

கடந்த வருடம் கௌதம் கிச்லு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்குப் பின் வரும் முதல் காதலர் தினத்தை ஒரு முன்னணி நடிகை பொதுவாக பெரிய ஸ்டார் ஓட்டலில் தான் கொண்டாடுவார். ஆனால், காஜல் அகர்வால் பொள்ளாச்சியில் உள்ள ஒரு சாதாரண மெஸ்ஸில் தன்னுடைய காதலர் தின டின்னரை சாப்பிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.



பொள்ளாச்சியில் ஒரு தம்பதியினர் நடத்தும் அந்த மெஸ்ஸுக்குச் சென்று சாப்பிட்டதோடு அவர்களைப் பற்றியும் பாராட்டி பதிவிட்டுள்ளார். “சாந்தி அக்கா மற்றும் பாலகுமார் அண்ணா ஆகியோர் அதிக அன்புடன் உணவைப் பரிமாறுவார்கள். அதனால்தான் கடந்த 27 வருடங்களாக அவர்களது உணவு தொடர்ந்து சுவையாக உள்ளது. இந்த சிறிய கடைக்கு நான் கடந்த ஒன்பது வருடங்களாக வந்து கொண்டிருக்கிறேன்,” எனக் கூறி அந்த தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து அதையும் பகிர்ந்திருக்கிறார்.

காஜல் அகர்வாலின் இந்த எளிமையான குணத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்கள் பொறுமைகாக்க வேண்டும்: அஜித்ரசிகர்கள் பொறுமைகாக்க வேண்டும்: ... அஜித் சொல்வதை ரசிகர்கள் கேட்பார்களா ? அஜித் சொல்வதை ரசிகர்கள் கேட்பார்களா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
16 பிப், 2021 - 19:16 Report Abuse
திரு.திருராம் இனி அந்த கடை பேமஸாயிரும்
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
16 பிப், 2021 - 15:42 Report Abuse
R S BALA சரிதேன்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in