Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'இந்தியன் 2' டிராப்பா ? : டுவிட்டரில் நடந்த காரசார விவாதம், உண்மை என்ன?

14 பிப், 2021 - 10:18 IST
எழுத்தின் அளவு:
Did-Indian-2-movie-dropped?

ஷங்கர் தயாரிப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஆரம்பமான படம் 'இந்தியன் 2'. அதற்குப் பிறகு அப்படத்திற்குப் பல்வேறு தடைகள். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் படப்பிடிப்பில் ராட்சத கிரேன் விழுந்து மூவர் மரணமடைந்தனர். அதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த ஒரு வருட காலமாக படப்பிடிப்பு நடக்காமலேயே உள்ளது.

இதனிடையே, 'மாஸ்டர்' படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் அறிவிப்பும் வெளியானது. 'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.

நேற்று முன்தினம் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகரான ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது. அதனால், 'இந்தியன் 2' படம் டிராப் ஆகிவிட்டதா என டுவிட்டர் தளத்தில் ரசிகர்கள் காரசார விவாதம் நடத்தினார்கள். 'இந்தியன் 2' டிரென்டிங்கில் கூட வந்தது. ஆனால், 'இந்தியன் 2' படப்பிடிப்பு இன்னும் ஓரிரு மாதங்கள் நடந்தால் போதும், மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.

கமல்ஹசான் சமீபத்தில் தனது காலில் மீண்டும் ஒரு ஆபரேஷன் செய்து கொண்டார். இன்னும் சில மாதங்கள் அவரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்களாம். அதனால் தான் 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகவில்லை என்கிறார்கள். மேலும் 'விக்ரம்' படப்பிடிப்பையும் தற்போது ஆரம்பிக்கும் எண்ணத்தில் கமல்ஹாசன் இல்லையாம்.

சட்டசபை தேர்தல் முடிந்த பிறகுதான் கமல்ஹாசன் நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகலாம் என்கிறார்கள். எனவே, 'இந்தியன் 2' டிராப் ஆகவில்லை. அப்படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் அடுத்த படத்திற்குப் போவார் என்று சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
காதலை தவிர கொடுக்க என்னிடம் ஏதும் இல்ல பப்பு : உருகிய அனிதாகாதலை தவிர கொடுக்க என்னிடம் ஏதும் ... ராமர் கோவில் - பவன் கல்யாண் தயாரிப்பாளர்கள் நன்கொடை ராமர் கோவில் - பவன் கல்யாண் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

kudiyanavan - coimbatore ,இந்தியா
15 பிப், 2021 - 10:29 Report Abuse
kudiyanavan சங்கர் பேசாம ரஜினியை வச்சு சிவாஜி மாறி ஒரு படம் ட்ரை பண்லாம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in