Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உலகத்தில் யாருமில்லை : சவால் விடும் கங்கனா ரணாவத்

09 பிப், 2021 - 23:01 IST
எழுத்தின் அளவு:
Kangana-challenge-of-her-Massive-transformation

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கங்கனா ரணாவத், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'தலைவி' படத்தில் நடித்து வருகிறார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இன்று திடீரென இப்படத்தின் சில புகைப்படங்களையும், கங்கனா நடித்து வரும் ஹிந்திப் படமான 'தாக்கட்' படத்தின் புகைப்படங்களையும் பகிர்ந்து ஒரு சவால் விடுத்துள்ளார். டுவிட்டரில் அந்த சவாலை அவர் பகிர்ந்துள்ளார்.

“இது உருமாற்றத்திற்கான எச்சரிக்கை... இந்த உலகத்தில் இப்போதைக்கு என்னைத் தவிர வேறு யாரும் இந்த அளவிற்கு மாற்றத்தைக் காண்பித்ததில்லை. மெரில் ஸ்ட்ரிப் போல அடுக்கடுக்கான கதாபாத்திரத் திறமை என்னிடம் உள்ளது. அதே போல கேல் கடாட் போல் என்னாலும் ஆக்ஷனாகவும், கிளாமராகவும் நடிக்க முடியும். இந்தப் பிரபஞ்சத்தில் என்னைத் தவிர வேறு யாராவது இந்த அளவிற்கு கலைத் திறமை காட்ட முடியுமா என வெளிப்படையாக சவால் விடுக்கிறேன். அப்போது என்னுடைய ஆணவத்தை நான் கைவிடுகிறேன். அதுவரை அந்தப் பெருமையின் மதிப்பு எனக்குத்தான்,” என சவால் விடுத்துள்ளார் கங்கனா.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு படத்திற்குக் கிடைத்த விடிவுகாலம், மற்ற படங்களுக்கும் கிடைக்குமா ?ஒரு படத்திற்குக் கிடைத்த ... 'குட்டி ஸ்டோரி'யின் ஸ்டோரிகள் என்னென்ன ? 'குட்டி ஸ்டோரி'யின் ஸ்டோரிகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

மனிதன் - riyadh,சவுதி அரேபியா
10 பிப், 2021 - 12:24 Report Abuse
மனிதன் குறைகுடம் கூத்தாடும்....
Rate this:
Manian - Chennai,ஈரான்
10 பிப், 2021 - 04:07 Report Abuse
Manian துணிச்சலான , திறமை உள்ள நடிகை . வாயை மட்டும் சற்று கட்டிக் கொண்டால் , ஒரு சிறந்த மனைவியாகவும் ஆகலாம் . தேளை தேனீயாக மாற்ற முடியுமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in