Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ராணா படக்கதையை மீண்டும் கேட்டார் ரஜினி : கே.எஸ்.ரவிக்குமார்

28 ஜன, 2021 - 13:41 IST
எழுத்தின் அளவு:
Rajini-again-hear-Rana-story-says-KS-Ravikumar

மலையாளத்தில் ஹிட் அடித்த ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தை தமிழில் 'கூகுள் குட்டப்பன்' என்ற பெயரில் ரீமேக் செய்து தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். இவரிடம் உதவியாளர்களாக இருந்த சபரி - சரவணன் இயக்க, பிக்பாஸ் புகழ் தர்ஷன், லாஸ்லியா மற்றும் யோகிபாபு என பலர் நடிக்கும் இந்த படத்தின் பூஜை இன்று(ஜன., 28) சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது ரஜினியுடன் மீண்டும் இணைந்து படம் பண்ணுவீர்களா? என்று கே.எஸ். ரவிக்குமாரிடம் நிருபர்கள் கேட்டபோது, ரஜினியுடன் நான் தொடர்பில் இருந்து தான் வருகிறேன். மாதம் ஒருமுறையாவது போன் செய்து நலம் விசாரிப்பேன். அந்த வகையில், சமீபத்தில பேசியபோது ராணா படத்தின் கதையை மீண்டும் ஒருமுறை சொல்லுங்கள் என்று கேட்டார். அப்போது கதை நன்றாக தான் உள்ளது. ஆனால் இப்போது உடல்நிலை இருக்கிற நிலையில் அந்த பண்ண முடியாது. உடல் சீரானதும் ராணா கதையை பண்ணுவோம் என்று கூறினார் என்றார்.

அதையடுத்து, நீங்கள் இயக்கி சூப்பர் ஹிட்டான படையப்பா, தெனாலி, வரலாறு போன்ற படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்கும் வாய்ப்பு உள்ளதா? என்று கேட்டபோது, நல்ல படமாக இயக்கினாலும் முதல் பாகத்துடன் ஒப்பிட்டுத்தான் பேசுவார்கள். அதனால் எனக்கு இரண்டாம் பாகம் இயக்குவதில் எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை என்றார் கே.எஸ்.ரவிக்குமார்.

கடந்த 2012ம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ராணா படத்தில் நடிக்கயிருந்தார் ரஜினி. ஆனால் அந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றபோதே ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அதையடுத்து சிங்கப்பூருக்கு சென்று உடல் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார். அதனால் அந்தப்படம் அப்போது டிராப் ஆனது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
முதன்முறையாக பிரபாஸ் படத்தில் இணைந்த ஸ்ருதிமுதன்முறையாக பிரபாஸ் படத்தில் ... சிம்புவுடன் மோதும் பிரபல இயக்குனர் சிம்புவுடன் மோதும் பிரபல இயக்குனர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

krishna - chennai,இந்தியா
31 ஜன, 2021 - 20:09 Report Abuse
krishna நடிச்சது போதும் ....ஒய்வு எடுத்துக்கோங்க ...
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
29 ஜன, 2021 - 06:06 Report Abuse
J.V. Iyer எழுபது வயதில் அரசியல் கட்சி ஆரம்பிக்க திராணி இல்லாதவருக்கு , இளம் நடிகைகளை கட்டிப்பிடித்து, சண்டையிட்டு நடிக்க மட்டும் உடலில் தெம்பு இருக்கிறது. பணம் வருகிறது அல்லவா. ஆனால் நாங்கள் இது போன்ற உங்கள் படத்தை பார்த்து சோர்ந்துவிட்டோம் ரஜனி சார்.
Rate this:
Aanandh - thamizhnaadu,யூ.எஸ்.ஏ
29 ஜன, 2021 - 05:39 Report Abuse
Aanandh அரசியல் கட்சி ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று ஆசை காட்டி இத்தனை நாட்களாக ஏமாற்றி இளிச்சவாய் தமிழ் மக்குகளை புதுப்படம் வெளிவரும் சமயத்தில் கிண்ணத்தில் கொடுத்த அ ல்வாவை டிசம்பர் மாத இறுதியில் உடம்பு சீக்குனு சொல்லி, உயிர்போனாலும் ஆரம்பிப்பேனு சொன்ன கட்சிக்கும் வாய்க் கரிசி போட்டு அடிப்பொடி அரைக்கிழங்களுக்கு அண்டாவில அல்வா கொடுத்த கபடவேடதாரி, இப்ப மீண்டும் கதை கேட்டு இளிச்சவாய் தயாரிப்பாளரிடம் ஒரு நூறு கோடி தேத்தலாம் என்ற நப்பாசைதான். இப்ப எந்த சீக்கும் இல்லை. துட்டு கிடை ச்சால் ஆரோக்கியம். இதெல்லாம் ஒரு ஈனப்பொழைப்பு. கே. எஸ். ரவிக்குமாரும் ஸ்மார்ட்டுதான். தன் கையை சுட்டுக்காம இருந்தா சரி
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
28 ஜன, 2021 - 23:18 Report Abuse
Vena Suna சினிமால நடிக்க தெம்பு இருக்கு....கட்சி ஆரம்பிக்க தெம்பு இல்லை...
Rate this:
Mohamed Malick - Dubai,இந்தியா
28 ஜன, 2021 - 19:58 Report Abuse
Mohamed Malick உடல் நிலை இவ்வளவு மோசமாக இருக்கும்போதும் பாவம் ரஜினிக்கு பணத்தேவை அதிகம் போல இருக்கிறது
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in