Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சரித்திர படத்திற்கு தயாராகும் ஷங்கர்?

21 ஜன, 2021 - 19:14 IST
எழுத்தின் அளவு:
Director-Shankar-next-movie-is-historical-subject?

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தமிழ் இயக்குனர் ஷங்கர். அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரம்மாண்டமாக ஒரு படத்தை எடுப்பது எப்படி என்பதை எப்போதோ ஆரம்பித்தவர். அவரது வழியில்தான் இன்று பல இயக்குனர்கள் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

'பாகுபலி' படங்களின் வெற்றிக்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயர் ராஜமவுலி பக்கம் நகர்ந்துவிட்டது. அதற்குப் பிறகு ஷங்கர் இயக்கிய '2.0' படம் பிரம்மாண்டமாக இருந்தாலும் அப்படம் 'பாகுபலி' வசூலை நெருங்கக் கூட முடியவில்லை.

தற்போது கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்குப் பிறகு பல மொழி நடிகர்கள் நடிக்கும் சரித்திரப் படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. 'பாகுபலி' படங்களின் பிரம்மாண்டத்தையும் மீறும் அளவிற்கு பெரும் பட்ஜெட்டில் அப்படத்தை அவர் உருவாக்கப் போவதாகச் சொல்கிறார்கள்.

சமீபத்தில்தான் தெலுங்கு நடிகர்களான பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோர் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஒரு வேளை இந்த சரித்திரப் படத்திற்காகக் கூட ஷங்கர் அவர்களை சந்தித்துப் பேசியிருக்கலாம் என்கிறார்கள்.

தற்போதைய தகவல்படி கன்னட நடிகரான 'கேஜிஎப்' ஹீரோ யஷ் நடிக்கப் போவதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் ஒரு நாயகனாக நடிக்கப் போகிறராம். தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்தும் சிலரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.

2022ம் ஆண்டு ஆரம்பமாகும் இப்படம் 2026ல் தான் வெளிவரும் என்று சொல்கிறார்கள். அடுத்த சில வாரங்களில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் எனத் தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
புதிய படத்திற்கு தயாராகும் அனுஷ்காபுதிய படத்திற்கு தயாராகும் அனுஷ்கா சூர்யாவுக்கு ஜோடியாகிறார் 'டாக்டர்' பிரியங்கா மோகன் சூர்யாவுக்கு ஜோடியாகிறார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

22 ஜன, 2021 - 18:43 Report Abuse
பக்தவச்சலம் சங்கர் சார் பக்தி படம் எடுங்க!
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
22 ஜன, 2021 - 05:50 Report Abuse
NicoleThomson யோசித்து முடிவெடுங்க , அவனை விட நான் பெரியவன் என்று காட்ட தேவையில்லை சார்
Rate this:
Raja - Chennai,இந்தியா
22 ஜன, 2021 - 05:35 Report Abuse
Raja இந்த சுவர் இன்னும் எத்தனை தயாரிப்பாளர்களை காவு வாங்க போகுதோ தெரியல..
Rate this:
Shankar G - kuwait,குவைத்
21 ஜன, 2021 - 20:38 Report Abuse
Shankar G சரக்கு தீர்ந்து போச்சோ ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in