Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » மறக்க முடியுமா »

மறக்க முடியுமா? - என் புருசன் குழந்தை மாதிரி

19 ஜன, 2021 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Marakkamudiyuma---en-purushan-kuzhandhai-maadhiri

படம் : என் புருசன் குழந்தை மாதிரி
வெளியான ஆண்டு : 2001
நடிகர்கள் : லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா, வடிவேலு
இயக்கம் : எஸ்.பி.ராஜ்குமார்

'அடுத்த முறை இதை விட அதிகமா கூவணும்...' என, வடிவேலு காமெடியில் அதகளம் செய்த படம், என் புருசன் குழந்தை மாதிரி. 'செத்து செத்து விளையாடுவோமோ, மாமனுக்கு மரியாதை இல்லையா...' போன்ற காமெடி எல்லாம், வேறு லெவல்! இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும், 'மீம்ஸ்' வழியே, பட்டையை கிளப்பி வருகின்றன.

ஊர் செல்வந்தராக இருக்கும் முருகேசனுக்கு, தன் மாமன் மகளான மகேஸ்வரி மீது காதல். இதற்காக, சில கிறுக்குத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறார். இந்நிலையில் முருகேசனுக்கும், மகேஸ்வரிக்கும் திருமணம் நடக்கிறது. இதற்கிடையில், நடனக் கலைஞரான சிந்தாமணியின் கர்ப்பத்திற்கு, முருகேசன் காரணமாகிறார். மகேஸ்வரியும் கர்ப்பமாக இருக்கிறார். இந்த பிரச்னையை, முருகேசன் எப்படி சமாளிக்கிறார் என்பதே, படத்தின் திரைக்கதை.

ஆர்வக்கோளாறு, அப்பாவி என, பொறியில் சிக்கிய எலி போன்ற முருகேசன் கதாபாத்திரத்தில், லிவிங்ஸ்டன் மிக பொருத்தமாக நடித்திருந்தார். மகேஸ்வரியாக தேவயானியும்; சிந்தாமணியாக விந்தியாவும் தங்கள் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருந்தனர். வடிவேலுவை, படத்தின் துாண் எனக் கூறலாம். அவர் இடம் பெறும் காட்சிகளில் எல்லாம், தியேட்டர் வெடித்து சிரித்தது.

தேவாவின் இசையில், 'ஆடிய ஆட்டம், சித்திரையே, நாலு அடி ஆறு அங்குலம், பட்டாம்பூச்சி, வாழ வைக்கும், வெண்ணிலா...' பாடல்கள் தாளம் போடச் செய்தன. இப்படம், வசூல் ரீதியாக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மா அயநா சண்டி பில்லாடு எனும் பெயரில், தெலுங்கில், 'ரீமேக்' செய்யப்பட்டது.

நீதி, நேர்மை எதுவும் இல்லை என்றாலும், என் புருசன் குழந்தை மாதிரி வரவேற்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - பார்த்தாலே பரவசம்மறக்க முடியுமா? - பார்த்தாலே பரவசம் மறக்க முடியுமா? - டும் டும் டும் மறக்க முடியுமா? - டும் டும் டும்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Senthilraj - Theni,இந்தியா
21 ஜன, 2021 - 08:21 Report Abuse
Senthilraj ஒவ்வொரு வருடமும் நிறைய மறக்க முடியாத படங்கள் வந்துள்ளது. ஆனால் சில படங்களை மட்டும் விமர்சனம் செய்வது ஏன்?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in