'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் நேற்று தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இன்று ஹிந்தியில் வெளியாகி உள்ளது.
தெலுங்கில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியான இப்படத்திற்கு முதல் நாளே நல்ல வரவேற்பு இருந்ததாக படத்தின் தெலுங்கு வினியோகஸ்தரான மகேஷ் கொனேரு அறிவித்துள்ளார். இன்றும் படத்தின் வசூல் நிறைவாகவே உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
“மாஸ்டர்' படத்தின் பரபரப்பான ஓட்டம் தெலுங்கு மாநிலங்களில் தொடர்கிறது. சினிமாவின் மேஜிக்கை கொண்டாடி வருகிறோம். 'பாக்ஸ் ஆபீஸ் மாஸ்டர் விஜய்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் நிறையவே வந்தாலும் தமிழ்நாட்டிலும் 50 சதவீதம்தான் இருக்கைகள் என்றாலும் படத்திற்கு நிறைவான வசூல் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.