பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
தமிழில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படம் கோலமாவு கோகிலா. 2018ம் ஆண்டு ரிலீசான இப்படத்தில் கதையில் நாயகியாக சிறப்பான நடிப்பைத் தந்து கலக்கி இருந்தார் நயன்தாரா. நெல்சன் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு மக்களிடையே கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, அதனை ரீமேக் செய்ய மற்ற மொழிகளில் முயற்சிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக கன்னட ரீமேக் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தியில் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்கை இயக்குநர் ஆனந்த் எல்.ராய் தயாரித்து வருகிறார். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்தத் தகவலை படக்குழு தெரிவித்துள்ளது. கோலமாவு கோகிலா இந்தி ரீமேக்கிற்கு குட்லக் ஜெர்ரி எனப் பெயரிடப்பட்டுள்ளது. சித்தார்த் செங்குப்தா இப்படத்தை இயக்குகிறார்.