Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விதிமுறைகளை மீறிய பிக்பாஸ்?

13 ஜன, 2021 - 13:25 IST
எழுத்தின் அளவு:
Did-Biggboss-breaks-the-rule?

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சித் தொடங்கி 100 நாட்கள் கடந்து விட்ட நிலையில், வரும் 16ம் தேதியுடன் பிக்பாஸ் முடிவடைய இருக்கிறது.

இம்முறை கொரோனா பிரச்சினை காரணமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பின்னர், கொரோனா பரிசோதனைகள் எல்லாம் முறையாகச் செய்யப்பட்டே போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின் இடையே கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இசைக்குழுவும் சமூக இடைவெளியுடன் தனித்தே நிறுத்தி வைக்கப்பட்டனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் போட்டியாளர்களைச் சந்திக்க அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர். அப்போது அவர்களையும் தனிமைப் படுத்தியே உள்ளே அனுப்பி வைத்தனர். இதனை போட்டியாளர்களின் உறவினர்களும் மறக்காமல் உறுதி செய்தனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்ற போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்தே இருந்தனர். பலர் வேறு சில நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களிலும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சமூகவலைதளத்தில் அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

இப்படியாக தனிமைப்படுத்துதல் இல்லாமல் சுதந்திரமாக இருந்த அந்த முன்னாள் போட்டியாளர்களை மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகழ்ச்சி முடிவடையும் தருவாயில் இருப்பதால், போட்டியாளர்களின் உடல்நிலை பற்றிய அக்கறை பிக் பாஸ் தயாரிப்பு குழுவிற்கு இல்லாமல் போய் விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தர்பார் படத்தை தொடர்ந்து மாஸ்டரிலும் அனிருத்தின் ரீமிக்ஸ்தர்பார் படத்தை தொடர்ந்து ... ஆரி பற்றி சர்ச்சைப் பதிவு: அந்தர்பல்டி அடித்த ரக்ஷன் ஆரி பற்றி சர்ச்சைப் பதிவு: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

S Ramkumar - Tiruvarur,இந்தியா
15 ஜன, 2021 - 15:20 Report Abuse
S Ramkumar இங்க பேருந்து சினிமா அரங்குகள் நிரம்பி வழியும் போது பெரிய முதலாளி என்ன செஞ்சானா என்ன பாசு. விடுங்க பசு. சிங்கப்பூர்ல உக்காந்துகிட்டு அரசாங்கம் சும்மா வேடிக்கை பாக்குதுன்னு வருத்தப்பட்டுக்கிட்டு. ஊரடங்கு காலத்துலயே வண்டி ஒட்டி பழகினவர்கள் நம் தமிழர்கள். இதெல்லாம் என்ன பாசு.
Rate this:
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
14 ஜன, 2021 - 20:41 Report Abuse
RG RG மொத்தத்துல பணம் முக்கியம் குமாரு . பிக் பாஸ் தான் கூப்புட்றான்னா , ஏற்கனவே வெளிய போன இவங்களுக்கு எதுக்கு மறுபடியும் உள்ள வரணும்கற ஆசை? நான் சந்தோஷமா போறேன், நான் பிக் பாஸ் க்கு போயிருக்கவே கூடாது, எங்கப்பாவை கூட இருந்து பாத்துக்க முடியல ... இப்படியெல்லாம் சீன் போட்டுட்டு, இப்போ கொஞ்சம் கூட யோசிக்காம உள்ள ஏன் போகணும் ?
Rate this:
Guna Gkrv - singapore,சிங்கப்பூர்
14 ஜன, 2021 - 06:31 Report Abuse
Guna Gkrv பிபி காசு பார்க்கணும் நடிப்பவர்களுக்கு காசு வேண்டும் அதுதான் பாதுகாப்பை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள் government சும்மா உட்கர்ந்து வேடிக்கை பாக்குது என்ன கொடுமை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in