Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துக்ளக் தர்பார் டீசர் : நாம் தமிழர் எச்சரிக்கை

12 ஜன, 2021 - 18:39 IST
எழுத்தின் அளவு:
Tughlaq-durbar-teaser-:-Seeman-party-warning

விஜய் சேதுபதி, பார்த்திபன், ராசிகண்ணா, மஞ்சிமா மோகன், சம்யுக்தா நடிப்பில் உருவாகி உள்ள படம் துக்ளக் தர்பார். டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியுள்ள இந்த படத்தின் டீசர் நேற்று வெளியானது. அதையடுத்து தற்போது அந்த டீசர் குறித்த சில சர்ச்சைகளும் சோசியல் மீடியாவில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

அதாவது, துக்ளக் தர்பார் படத்தில் அரசியல்வாதியாக நடிக்கும் பார்த்திபனின் பெயர் ராசிமான் என்றும், அவர் மக்கள் முற்போக்கு முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நடத்துவதாகவும் அந்த டீசரில் ஒரு போஸ்டர் இடம்பெற்றது. அதோடு, புலி உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும் என்ற வாசகமும் அதில் இடம்பெற்றிருந்தது. இது தான் தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் பரபரப்பு விவாதமாகியிருக்கிறது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக் குமரன் வெளியிட்ட செய்தி : துக்ளக் தர்பார் திரைப்பட முன்னோட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானுக்கு எதிரானது போல சில காட்சிகள் இடம் பெற்றிருந்தது எங்களை மிகுந்த மனவேதனைக்குள்ளாக்குகிறது. இதுபற்றி படத்தின் தயாரிப்பாளர் லலித்குமாரிடம் கேட்டபொழுது "தெரியாமல் நடந்து விட்டது அந்தமாதிரி காட்சிகளை சிஜி பயன்படுத்தி படத்திலிருந்து முழுவதுமாக நீக்கி விடுகிறேன் என உறுதி அளித்துள்ளார்.

இருப்பினும் இம்மாதிரியான காட்சிகளை எடுத்த இயக்குனர், இதில் நடித்த நடிகர்களை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தக்காட்சிகளோடு இப்படம் திரைக்கு வருமாயின் உலகம் முழுதும் ஒரு காட்சி கூட திரையரங்குகளில் ஓடாது என்பதை எச்சரிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறோம். இழவுவீட்டில் இருக்கும் எங்களிடம் வந்து வம்பிழுக்கும் வேலையை விடுங்கள்.. இல்லையேல் இந்தக் கலைத்துறையிலிருந்து வெகுவிரைவில் அப்புறப்படுத்தப்படுவீர்கள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
பொங்கலுக்கு மாநாடு மோஷன் போஸ்டர்பொங்கலுக்கு மாநாடு மோஷன் போஸ்டர் ஜன., 28ல் கபடதாரி ரிலீஸ் ஜன., 28ல் கபடதாரி ரிலீஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

P Ravindran - Chennai,இந்தியா
15 ஜன, 2021 - 19:21 Report Abuse
P Ravindran இவர்களை பற்றி ஏன் சொல்லக்கூடாது. இவர்கள் மற்றவர்களை கீழ்த்தரமாக பேசுவதில்லையா.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
14 ஜன, 2021 - 10:52 Report Abuse
Sridhar தம்மதுண்டோ என்னவோ, வன்முறையாளர்கள் என்றால், எல்லோருக்கும் உலகம் பூராவே பயம்தானே? ஹிந்துக்களும் வன்முறையில் ஈடுபடாவிட்டாலும், செய்யமுடியும் என்கிற பயத்தை உருவாக்கினால், அவமதிக்க தயங்குவார்கள். ரொம்ப "நல்லவன்" போல் காட்சியளித்தால், ஏறி மிதிக்கத்தான் செய்வார்கள்.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14 ஜன, 2021 - 04:14 Report Abuse
J.V. Iyer ஹிந்துக்களிடம் பயம் இல்லை. எப்படிவேண்டுமானாலும் அவர்களை புண்படுத்தலாம். ஆனால் இவர்களின் பயம்.
Rate this:
Siva - Aruvankadu,இந்தியா
13 ஜன, 2021 - 08:18 Report Abuse
Siva சினிமா செய்திகள் என்று இருப்பது போல தமாஷ் செய்திகள் என்று இருப்பது நல்லது.
Rate this:
Naduvar - Toronto,கனடா
12 ஜன, 2021 - 23:25 Report Abuse
Naduvar நாம் டம்பளர் தொம்பிகல ...இப்போவே இப்புடி பயமுறுத்துறீங்களே நீங்க ஆடிச்சிக்கு வந்தா ...சீமாறு என்ன ஆட்டம் ஆடம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in