'கர்ணன்' - திகைத்துப் போன சந்தோஷ் நாராயணன் | அப்பா தயாரிப்பில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி | பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா |
லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடித்துள்ள “பூமி” படம் ஜன.,14ல் ஓடிடியில் வெளியாகிறது. விண்வெளிக்கு செல்லும் சாகச பயணத்திற்கு முன் ஒரு தனி மனிதன், தன் சொந்த ஊரில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த முயலும் போராட்டம் தான் கதை.
நிதி கூறுகையில், ''பொதுவாக நியாயத்திற்காக, லட்சியத்திற்காக போராடும் நாயகனின் கதைகள், நாயகி பாத்திரம் கவனிக்கும்படியாக இருக்காது. ஆனால் பூமி அதிலிருந்து மாறுபட்டதாக இருந்தது. இதில் எனது கதாபாத்திரம் முக்கியத்துவம் கொண்டது. என் நடிப்பு திறமையை காட்டும் ஒரு வேடம் கிடைத்தது பெருமை. ஜெயம் ரவியின் 25வது படத்தில் பங்கு கொண்டதை நான் பெருமையாக கருதுகிறேன். அனைத்து இடங்களிலும் எளிதில் கொண்டாடும்படியான படைப்புடன் இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் லக்ஷ்மன்'' என்கிறார்.