பாடும் நிலா எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு | மீண்டும் களத்தில் குதித்த ஷிவானி | மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம் | ஓணம் பண்டிகைக்கு தள்ளிப்போன மரைக்கார் ரிலீஸ் | தம்பியின் டைரக்சனில் நடிக்கும் அஜ்மல் | மலையாளத்தில் நுழைந்த சந்தோஷ் நாராயணன் | பாபி சிம்ஹா படத்திற்கு இசையமைக்கும் பிரேமம் பட இசையமைப்பாளர் | காதி உடை கொடுத்த கமலை விமர்சித்த சுசித்ரா | கேஜிஎப் 2 - அதிக விலை கேட்கும் தயாரிப்பாளர்கள் | மீண்டும் அருண் விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர் |
தமிழ்நாட்டில் கொரோனா தளர்வுகளில் ஒன்றாக நவ., 10ல் முதல் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்பின் தீபாவளியை முன்னிட்டும் கடந்த இரண்டு மாத காலமாகவும் சுமார் 40 படங்கள் வெளிவந்தன. ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக ரசிகர்கள் தியேட்டர்கள் பக்கமே வரவில்லை. அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக வர மறுக்கிறார்கள் என்றே பேசப்பட்டது. அதேசமயம், ரசிகர்களை வரவழைக்கும் விதத்தில் முன்னணி நடிகர்களின் படங்களோ, தரமான படங்களோ வரவில்லை என்பதைப் பற்றி வெளிப்படையாக பேச மறுத்தார்கள்.
முன்னணி நடிகர்களின் படங்கள் தான் ரசிகர்களை வரவழைக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கம். விஜய் நடித்து வெளிவர உள்ள 'மாஸ்டர்' படத்திற்கான முன்பதிவு ஆரம்பமானது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
13ம் தேதி புதன்கிழமை வெளியாகும் படத்திற்கு 17ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை ஐந்து நாட்களுக்கு ஏறக்குறைய முன்பதிவு முடிந்துவிட்டது. முக்கிய மாநகரங்கள், நகரங்களில் ஒரு சில தியேட்டர்களில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இருக்கைகள் காலியாக உள்ளன. அவையும் அடுத்த சில நாட்களில் நிறைந்துவிடும் என்கிறார்கள்.
கொரோனா தொற்று பயத்தையும் மீறி 'மாஸ்டர்' படத்திற்கு இப்படி ஒரு முன்பதிவு நடப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற நிலையிலும் முன்பதிவு நிலவரம் நிறைவாக உள்ளதாக தியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.