துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது அவர் ஹாலிவுட் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். தனது கணவரும், பாடகருமான நிக் ஜோன்சுடன் லண்டனில் வசித்து வருகிறார். கொரோனா காலத்தில் அங்குள்ள பெண்கள், சிறுவர்களுக்கு அங்குள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையல் பிரியங்கா நேற்று முன்தினம் வீட்டுக்கு அருகில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றுள்ளார். அப்போது அவர் உரிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பிரியங்காவை போலீசார் எச்சரித்து அனுப்பியதாகவும், அபராதம் விதித்ததாகவும் தகவல் பரவியது. ஆனால் இதை பிரியங்கா தரப்பு மறுத்துள்ளது.
இதுகுறித்து அவரின் செய்தி தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், லண்டனில் சினிமா மற்றும் டிவி தொடர்களின் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தன் படத்தின் ஷுட்டிங்கிற்காக தலைமுடியை கலரிங் செய்ய சலூன் கடைக்கு சென்றார். அதற்கான உரிய அனுமதியை பெற்றே அவர் அங்கு சென்றுள்ளார். கொரோனா விதிமுறை எதையும் அவர் மீறவில்லை. அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக வெளியான தகவலும் உண்மையல்ல என தெரிவித்துள்ளார்.