Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர்கள் 100 சதவீத அனுமதி : பொங்கலுக்குள் அறிவிப்பு வருமா ?

02 ஜன, 2021 - 17:17 IST
எழுத்தின் அளவு:
Did-government-give-permission-100-percent-to-theatres?

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அரசு தரப்பில் அனுமதி தரப்பட்டது.

டிசம்பர் மாதத்திலேயே அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என தியேட்டர் சங்கங்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தன. இருப்பினும் அனுமதி வழங்கப்படவில்லை. எப்படியும் புத்தாண்டு பரிசாக அனுமதி தந்துவிடுவார்கள் என எதிர்பார்த்தார்கள், அதுவும் நடக்கவில்லை.

கடந்த வாரத்தில் நடிகர் விஜய் கூட தமிழக முதல்வரைச் சந்தித்து அது தொடர்பான கோரிக்கையை வைத்தார். விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' படம் ஜனவரி 13ம் தேதியன்றும், சிம்பு நடித்துள்ள 'ஈஸ்வரன்' படம் ஜனவரி 14ம் தேதியன்றும் வெளியாக உள்ளன.

எப்படியும் அதற்குள் 100 சதவீத அனுமதி கொடுத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் அப்படக்குழுவினரும், தியேட்டர்காரர்களும் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் அதற்குள் அறிவிப்பு வெளியாகுமா என்ற பரபரப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.

100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைத்தால் மட்டுமே 'மாஸ்டர்' போன்ற படங்கள் லாபத்தை எட்டி முடியும். எனவே, திரையுலகத்தினர் சார்பில் அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்களா அல்லது அவர்களாகவே அறிவிக்கும் வரை அமைதி காப்பார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
டிரைலர் போட்டி - 'பூமி'யைத் தாண்டும் 'மாறா'டிரைலர் போட்டி - 'பூமி'யைத் ... மன நிம்மதி : ஆன்மிக பயணம் செய்ய ரஜினி முடிவு மன நிம்மதி : ஆன்மிக பயணம் செய்ய ரஜினி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

Charles - Burnaby,கனடா
04 ஜன, 2021 - 01:15 Report Abuse
Charles என்னுடைய கருத்து " எந்த ஒரு பொறுப்புள்ள அரசும் தியேட்டர்களை இந்தமாதிரி ஒரு தொற்றுநோய் இருக்கும் போது திறக்கக்கூடாது". அப்படி செய்தல் அரசு அதற்கு பொறுப்பேற்கவேண்டும்
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா ) தியேட்டர்கள் திறந்தால் மீண்டும் கொரோனா அதை சுட்டிக்காட்டி சுடலை கான் வெற்றிபெறுவதற்கு வழி அமைக்க்காதீர்கள்
Rate this:
EMS - chennai,இந்தியா
03 ஜன, 2021 - 16:48 Report Abuse
EMS சினிமா துறை ஒழிந்தால் மட்டுமே தமிழ் நாடு முன்னேறும். தியேட்டர் போய் கொரோனா வந்தால் அந்த செலவு ஏற்க நடிகர்கள் தயாரா. விஜயும், சிம்புவும் அறிக்கை விட சொல்லுங்கள் பார்க்கலாம். இதற்கும் மேல் தியேட்டர் போய் படம் பார்த்தால் தமிழ் நாட்டை ஆண்டவனாலும் திருத்த முடியாது.
Rate this:
balachandran - dammam,சவுதி அரேபியா
03 ஜன, 2021 - 18:51Report Abuse
balachandranஇனிமேலும் தியேட்டர் போய் படம் பார்த்து பால் ஊத்திக்கிட்டு இந்தக்கைன்னா எவனலையும் தமிழ்நாட்ட்டை திருத்த முடியாது அதுவும் இந்த பைத்தியக்கார விசிறி இருக்கிறவரைக்கும் நடிகர்களும் திருந்த மாட்டாங்க...
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
03 ஜன, 2021 - 16:26 Report Abuse
Anbuselvan Now only, the total number of covid19 cases are coming down. It will not be proper to take the call now. May be during Tamil New Year day it would be appropriate if the cases are under control.
Rate this:
Elango - Sivagangai,இந்தியா
03 ஜன, 2021 - 06:26 Report Abuse
Elango எந்த படமும் வர வேண்டாம் படம் முழுவதும் அசிங்கமான பேச்சு வன்முறை சிறுவயது காதல் இப்படி எடுத்தால் சமுதாயம் உருபடுமா... நடிகர்கள் அனைவரும் மனசாட்சி இல்லாம....நடிக்கிறாங்க காசு காசுனு அலைர ஜென்மங்கள்....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in