மேக்னா நடிக்கும் நான் வேற மாதிரி | லிப்ட்-ல் பாடிய சிவகார்த்திகேயன் | ஹாஸ்டல் ஆக மாறிய மலையாள ரீமேக்கில் அசோக் செல்வன் | தொப்பை வளர்த்து, கரைத்த உன்னி முகுந்தன். | தனிமைப்படுத்திக் கொண்ட மகேஷ்பாபு - ராம்சரண் | கொரோனா தீவிரத்திலும் விடாமல் படம் இயக்கிவரும் மோகன்லால் | லாபம் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் வாழ்க்கையில் முக்கியமான தருணம் : சூரி நெகிழ்ச்சி | மீண்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்ட இலியானா | தெலுங்கு கற்கும் விஜய் சேதுபதி |
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தற்போது வீட்டினுள் எட்டு போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
நேற்று முதல் போட்டியாளர்களின் குடும்பத்தினர் சந்திக்கும் நிகழ்வு ஆரம்பமானது. முதலில் ஷிவானியின் அம்மா வீட்டிற்குள் நுழைந்தார். எவ்வளவு கோபத்தில் அவர் வீட்டிற்குள் சென்றார் என்பது உடனடியாக வெடிக்க ஆரம்பித்தது.
பாலாஜி பின்னால் தான் ஷிவானி சுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை எந்த அளவிற்கு கோபமாக வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கு கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தினார். சில வார்த்தைகளை பீப் போட்டு எடிட் செய்யும் அளவிற்கு ஷிவானியின் அம்மா பேசியிருந்தார்.
80 நாட்களுக்கு மேல் தன்னை சந்திக்க வந்த அம்மா இந்த அளவிற்கு கோபமாகப் பேசுவார் என்பதை ஷிவானியால் ஜீரணிக்கவே முடியவில்லை. “என்னம்மா இப்படிப் பேசறீங்க, கத்திப் பேசாதீங்க அம்மா, இப்படிப் பேசாதீங்க அம்மா,” என எவ்வளவு கெஞ்சியும் ஷிவானி அம்மாவின் கோபமான பேச்சு நிற்கவேயில்லை.
வீட்டிற்குள் இருந்த சக போட்டியாளர்கள் சத்தம் கேட்டு, மெயின் கதவுக்கு அருகிலும், பாத்ரூம் கதவுக்கு அருகிலும் வந்து அதை ஒட்டுக் கேட்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு ரம்யா வந்து ஷிவானியை சமாதானப்படுத்தி அம்மாதானே திட்டுகிறார் என சாந்தப்படுத்தினார்.
மற்றொரு பக்கம் தன்னால் தான் ஷிவானிக்கு இப்படி ஒரு நிலைமை என்பதைப் புரிந்து கொண்டு பேசிய பாலாஜியை ஆஜித் சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனாலும், தொடர்ந்து கண்ணீரை அடக்க முடியாமல் அழுதார் பாலாஜி.
வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா மற்ற போட்டியாளர்களிடம் நலம் விசாரித்தாலும் பாலாஜி பக்கம் திரும்பவேயில்லை, அவரை என்னவென்றும் கேட்கவில்லை. அவரைப் புறக்கணிப்பதைச் சரியாகச் செய்தார். பாலாஜியும் அவரிடம் சென்று பேச முடியாத நிலையில் தவித்துப் போனார்.
வீட்டை விட்டு வெளியேறும் நேரம் வந்ததும் ஷிவானியின் அம்மா கோபத்தை மறந்து மகளிடம் பாசமாக சில வார்த்தைகளைப் பேசி, போட்டி மனப்பான்மையுடன் விளையாட வேண்டும் என அட்வைஸ் செய்துவிட்டுப் போனார்.
இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டிற்குள் முதன் முதலாக நுழைந்த குடும்பத்தினரில் ஷிவானியின் அம்மா பேசிய பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் செயலை வரவேற்றும், விமர்சித்தும் கருத்துக்கள் பதிவிடப்பட்டன.
இன்று ஒளிபரப்பான புரோமோக்களில் கூட கமெண்ட் பகுதியில், “நேயர் விருப்பத்துக்காக ஷிவானி அம்மாவ இன்னொரு வாட்டி வர சொல்லுங்க பிக் பாஸ்” என்று ரசிகர்கள் சொல்லுமளவிற்கு நேற்றைய நிகழ்வு இருந்தது.
நேற்றைய நிகழ்ச்சியில் கடைசி வரையிலும் பாலாஜி, ஷிவானி பேசிக் கொள்ளவேயில்லை. அந்த இடைவெளி நீடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.