Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரசாத் ஸ்டுடியோவை காலி செய்தார் இளையராஜா : பொருட்கள் ஒப்படைப்பு

30 டிச, 2020 - 09:46 IST
எழுத்தின் அளவு:
Ilayaraja-vacate-Prasad-Studio

இளையராஜா தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தபோது வெளிநாட்டில் இருந்து இசை கருவிகளை இறக்குமதி செய்திருந்தார். அதை வைத்துக் கொள்வதற்கு சரியான இடவசதி இன்றி தவித்தபோது பிரசாத் ஸ்டூடியோ அதிபர் எல்.வி.பிரசாத், தனது ஸ்டூடியோவை ஒதுக்கிக் கொடுத்து, இளையராஜா விரும்புகிற காலம் வரை அங்கு பணியாற்றவும் அனுமதி அளித்தார்.

இதை தொடர்ந்து பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா 35 ஆண்டுகளாக ரிக்கார்டிங் தியேட்டர் வைத்து இசையமைத்து வந்தார். அவருக்கு அங்கு 5 அறைகள் இருந்தன. பிரசாத் நிர்வாகத்திற்கு புதிய தலைமுறைகள் பொறுப்புக்கு வந்ததும் ஸ்டூடியோவை வேறு பணிகளுக்கு பயன்படுத்த வேணிடியது இருந்ததால் இளையராஜாவை காலி செய்ய வற்புறுத்தினர். ஸ்டூடியோ நிர்வாகம் தன்னை பணி செய்ய விடாமல் தடுப்பதாக இளையராஜா போலீசில் புகார் செய்தார். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

பின்னர் சமரச தீர்வு ஏற்பட்டு ரிக்கார்டிங் தியேட்டரில் இளையராஜா நேற்று முன்தினம் ஒரு நாள் தியானம் செய்யுவும், அவருக்கு சொந்தமான பொருட்களை எடுத்து செல்லவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் வரவில்லை. அவரின் அறை திறக்கப்பட்டது உள்ளிட்ட விஷயங்களால் அவர் மன வருத்தத்தில் இருந்தார்.

இந்த நிலையில் நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரின் முன்னிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்த இளையராஜாவின் பொருட்கள் கணக்கெடுக்கப்பட்டு அதனை 160 பெட்டிகளில் பேக் செய்யப்பட்டு இளையராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதோடு அங்கு இருந்த இளையராஜாவின் விருதுகள், பரிசு பொருட்கள், 55 ஆயிரம் ரொக்க பணம், காசோலைகள் ஆகியவையும் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜனவரி 2ல் ஈஸ்வரன் இசை வெளியீடுஜனவரி 2ல் ஈஸ்வரன் இசை வெளியீடு நான் தேவதூதன் அல்ல: சுயசரிதை எழுதுகிறார் சோனுசூட் நான் தேவதூதன் அல்ல: சுயசரிதை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

30 டிச, 2020 - 23:02 Report Abuse
ஐஷ்வர்யன் முழுமையான உண்மை தெரியாமல் ஓர் உன்னத கலைஞனை சகட்டுமேனிக்கு விமர்சித்து ஏன் உங்களையே நீங்கள் கேவலப்படுத்திக் கொள்ள வேண்டும்?
Rate this:
30 டிச, 2020 - 21:57 Report Abuse
Ranjit Kumar இதுக்கு பேருதான் oc ல மங்களம் பாடுறதா?🤣🤣😂😂
Rate this:
bigu -  ( Posted via: Dinamalar Android App )
30 டிச, 2020 - 11:28 Report Abuse
bigu பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் இருக்கும் பெருந்தன்மை இளையராஜாவிடம் இல்லாதது வருத்தம் அளிக்கிறது
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in