"மிஸ்டர் காப்ளர்" - சாதனை குறும்படத்திற்கு விருது வழங்கி கவுரவம் | கனியை வீட்டுக்கும் சென்று பாராட்டிய சிம்பு | பெண் ஆட்டோ ஓட்டுனருக்கு கார் பரிசளித்த சமந்தா | ஷங்கர் படத்தில் விஜய்சேதுபதி? | கொரோனாவிலிருந்து மீண்டு ரன்பீருடன் மாலத்தீவு பறந்த ஆலியா பட் | எம்.ஜி.ஆர்.மகன் ரிலீஸ் தள்ளி வைப்பு | படக் குழுவினருக்கு கொரோனா: கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு நிறுத்தம் | விவேக் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணம் என அவதூறு: மன்சூரலிகான் மீது போலீசில் புகார் | வெற்றி நடிக்கும் ரோட் மிஸ்ட்ரி படம் | சித்திரம் பேசுதடி: புதிய தொடர் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு, அவ்வப்போது விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். அந்தவகையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் இணைந்து தற்போது பிரபல நிறுவனம் ஒன்றின் விளம்பரப் படத்தில் நடித்துள்ளார் மகேஷ்பாபு. தாங்கள் இணைந்து பணியாற்றிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரன்வீர் சிங்.
மேலும் மகேஷ்பாபு குறித்து ரன்வீர் சிங் கூறும்போது, “நான் சந்தித்த தலைசிறந்த மனிதர்கள் சிலரில் மகேஷ்பாபுவும் ஒருவர்.. அவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போதெல்லாம் உற்சாகத்துடன் மேன்மையான விஷயங்களை பேசினோம். பெரியண்ணா மகேஷ்பாபுவுக்கு எனது அன்பும் மரியாதையும்” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.. சில வருடங்களுக்கு முன் ஏற்கனவே மகேஷ்பாபுவும் ரன்வீர் சிங்கும் இதேபோன்று ஒரு விளம்பரப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.