ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 | கன்னடத்தில் திரிஷ்யம் 2 : பி வாசு இயக்குகிறார் | அகோரியாக அதிரவைக்கும் பாலகிருஷ்ணா | ரிலீஸ் தேதியுடன் ஜூனியர் என்டிஆரின் புதுப்பட அறிவிப்பு | ராதே ஷ்யாம் புதிய போஸ்டர் வெளியீடு | கர்ணன் - தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி | கொரோனாவிலிந்து மீண்டுவிட்டோம் - மாதவன் | சாந்தி வாழ்க்கை படம் துவங்கியது | தனுஷிற்கு ஜோடியாகும் உப்பெனா நாயகி | கபடி பயிற்சியில் துருவ் விக்ரம் |
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக இந்த மாதம் 3ம் தேதி தெரிவித்திருந்தார். “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு”, “மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.
டிசம்பர் 31ம் தேதிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அரசியலுக்கு வரவில்லை என்பதை டுவிட்டர் மூலம் அறிக்கையாக இன்று வெளியிட்டார்.
அவருடைய அரசியல் வரவு பற்றிய எதிர்பார்ப்பு இந்த அறிக்கை நிரந்தர முற்றுப்புள்ளியை வைத்துவிட்டது. இனி, எதிர்காலத்தில் அவருடைய அரசியல் நுழைவு பற்றி யாரும் பேசாத அளவிற்கு அந்த அறிக்கையிலேயே அனைத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
ரஜினியின் அறிக்கைக்கு திரையுலகத்தைச் சார்ந்த பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசியல் சுற்றுப் பயணத்தில் இருக்கும் கமல்ஹாசன் கூட 'என் ரஜினி ஆரோக்கியமாக இருக்க வேண்டும், அவரை சென்னை சென்றதும் நேரில் சந்தித்து பின் விவரமாகத் தெரிவிக்கிறேன்,” என்று பேசியுள்ளார்.
கமல்ஹாசன் போல பல நடிகர்களும், நடிகைகளும், திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் அவர் ஆரோக்கியமாக மன அமைதியுடன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்றும் அவருடைய முடிவை ஏற்றுக் கொள்வதாகவும் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினியின் இந்த முடிவு சிலருக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தாலும், சிலர் தொடர்ந்து அவர் அரசியல் கட்சியே ஆரம்பிக்க மாட்டார் என்று சொன்னோமோ அது இன்று நடந்துவிட்டதே என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், ரஜினிகாந்த் தொடர்ந்து சினிமாவில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது.