ரோஷன் ஆண்ட்ரூஸ் படத்தின் மூலம் அறிமுகமாகும் இன்னொரு மாளவிகா | புழுவின் வெற்றியை கொண்டாடிய மம்முட்டி பார்வதி | விக்ரம் படத்தில் ஆறு மலையாள நடிகர்கள் | காக்க காக்க சூர்யா தான் இன்ஸ்பிரேஷன் : மலையாள நடிகர் பெருமிதம் | ஆர்.கண்ணன் இயக்கத்தில் சிவனாக நடிக்கும் யோகிபாபு | ஓடிடியில் இலவசத்திற்கு மாறிய 'ஆர்ஆர்ஆர்' | துடிக்கும் கரங்கள்: ரஜினி பட தலைப்பில் விமல் | கோடை கொண்டாட்டம் : ஜீ தமிழில் இந்த வாரம் ‛தி ப்ரிஸ்ட்' திரைப்படம் | படப்பிடிப்பில் பிரியங்கா சோப்ரா காயமா? | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : ஹாலிவுட் நடிகைக்கு 8 ஆண்டு சிறை |
முன்னணி டப்பிங் கலைஞர் அருண் அலெக்சாண்டர். ஆங்கிலம், மற்றும் இந்தி படங்களுக்கு டப்பிங் பேசி வந்தார். அதோடு வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். மாநகரம், கைதி, கோலமாவு கோகிலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார்.
அலெக்சாண்டர் அடையாரில் குடும்பத்துடன் வசித்து வந்தார் . நேற்று மாலை சாலிகிராமத்தில் உள்ள ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 54. அலெக்சாண்டருக்கு மனைவி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இரங்கல்
லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இவ்வளவு சீக்கிரம் எங்களை விட்டு பிரிவீர்கள் என எதிர்பார்க்கவில்லை அண்ணா.. என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. எப்போதும் என் இதயத்தில் நீங்கள் வாழ்வீர்கள் அண்ணா” என குறிப்பிட்டுள்ளார்.