Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாவ கதைகளுக்காக 12 கிலோ எடை குறைத்தேன் ; காளிதாஸ் ஜெயராம்

28 டிச, 2020 - 20:34 IST
எழுத்தின் அளவு:
Kalidas-jayaram-reduce-12kg-for-Paavakathaigal

சமீபத்தில் ஓடிடி தளத்தில் பாவ கதைகள் என்கிற பெயரில் நான்கு குறும்படங்களை ஒன்றிணைத்து ஆந்தாலாஜி படம் வெளியானது. இவற்றை கவுதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா. விக்னேஷ் சிவன் என நான்கு பேர் இயக்கியிருந்தனர். இந்த நான்கு படங்களிலும் சுதா கொங்கரா இயக்கியிருந்த தங்கம் என்கிற குறும்படம் மட்டும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இதில் பெண் தன்மை கொண்ட சத்தார் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் குவிந்தன.

இந்தப்படத்தில் நடித்தது குறித்து தற்போது பேட்டி ஒன்றில் கூறியுள்ள காளிதாஸ், “இந்தப்படத்தில் எனது கதாபாத்திரத்திற்காக 45 நாட்கள் கடுமையான பயிற்சி மேற்கொண்டு சுமார் 12 கிலோ எடையை குறைத்தேன்.. என்னுடைய காட்சிகள் வெறும் எட்டு நாட்களிலேயே படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன.. ஆனால் என் கதாபாத்திரத்தின் தாக்கம் என் மனதில் இருந்து விலக வெகு நாட்கள் ஆனது. ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தை ஏற்க தயங்கினேன்.. அதன்பின்னர், துணிந்து நடிப்போம், ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் சினிமாவை விட்டே வெளியேறிவிடலாம் என்றுகூட நினைத்திருந்தேன்.. ஆனால் இவ்வளவு பாராட்டுக்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'ஈஸ்வரன்' படம் : இசையமைப்பாளர் தமன் மகிழ்ச்சி'ஈஸ்வரன்' படம் : இசையமைப்பாளர் தமன் ... அப்பா ஆனார் யோகி பாபு அப்பா ஆனார் யோகி பாபு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
29 டிச, 2020 - 19:44 Report Abuse
KayD oru good actor ku heroism mukkiyam illai acting s thaan mukkiyam.. the best examples are Nazar, Prakash raj, Raghuvaran and ellooraiyum kavarntha Vijay sethupathi. avr kan nadkium avar pechi vaazhum... ippadi லிஸ்ட் பெருசா poitu irukku.. Kaali nee நீ சின்னப்ப தாஸ் இனி நீ பாஸ் பாஸ் 12 kgs kuraichi yaarum eduthu seiya yosikum indha role ai challenge aa eduthu seinjathae unaku periya award.. indha role panna unaku ini vara pogum role ellam challenging aa irukum. Jayaram guidance unaku irukum hero aa ga vdam adhai vida fans rum marak mudiyatha roles aa eduthu sei.. vera level la povae raasa. Best wishes for all your future plans. Sathaar aa vaazhuthutae thnagam nee ini rasikar manasil vaazha porae singam nee.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in